தினமும் நாள் இப்படிதான் போய்க்கொண்டிருக்கிறது. இன்றோடு நான்கு மாதங்கள் முடிந்து விட்டன. ‘ ச்சே.. இண்டைக்காவது தைரியமா போய் கதைக்கனும்.. ‘ என்று நினைத்துக் கொண்டே ஸ்கூட்டியை கிளப்பினாள் லீனா. கோவிலுக்கு வந்து சுவாமியை கும்பிட்டுவிட்டு, அவனைத் தேடி கண்களை அலைய விட்டாள். அவனைக் காணவில்லை. ஏமாற்றமாக இருந்தது. கோவில் தூண் ஒன்றிற்கு பக்கத்தில் உட்கார்ந்தாள். நான்கு மாதங்களுக்கு முன் இதேபோல் ஒரு நாளில்தான் அவனை முதன்முதலில் சந்தித்தாள் லீனா. அந்த அலுவலகத்தில் வேலை கிடைத்து முதல் நாள் வேலைக்கு போகும் போதுதான் அலுவலகத்திற்கு பக்கத்தில் இருந்த கோவிலைக் கண்டாள். சரி போய் பிள்ளையாரை பார்த்து ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டே போய்விடலாம் என்று போனாள். குழாயில் காலைக் கழுவிக்கொண்டு திரும்பும் போது எதிரில் வந்தவனோடு மோதப் பார்த்து சுதாகரித்து நின்றுவிட்டாள். ஆனால் அவன் கண்களின் ஈர்ப்பில் விழுந்தே விட்டாள். முகத்துக்கு மாஸ்க் அணித்திருந்தான். நேர்த்தியாக உடை அணிந்திருந்தான். ஒரு கனம் அவன் கண்களின் ஈர்ப்பு அவளை நிலைகுலையத்தான் செய்தது. அவனோ சற்றுவிலகி நடந்து குழாயடி...
Global daily tamil news and updates