புதன்கிழமை, செப்டம்பர் 24, 2025 இன்றைய தினம் பிரான்சின் பாஸ்-ரைன் (Bas-Rhin) மாவட்டத்தில், ஸ்ட்ராஸ்போர்க் (Strasbourg) நகருக்கு அருகே உள்ள பென்ஃபெல்ட் (Benfeld) என்ற சிறிய நகரில் உள்ள ராபர்ட்-ஷூமன் கல்லூரியில் (Collège Robert-Schuman) ஆசிரியர் ஒருவரை அதே கல்லூரியில் பயிலும் மாணவர் ஒருவர் தாக்கியுள்ளார். இன்று காலை 8:15 மணியளவில் குறித்த கல்லூரியில் பயிலும் 14 வயதுடைய மாணவன் கல்லூரியில் சங்கீத ஆசிரியராக பணியாற்றும் 66 வயதுடைய பெண் ஆசிரியரை கத்தியால் தாக்கியுள்ளார். இந்த சம்பவம் பிரான்ஸ் கல்வி முறையில் (Système éducatif français) பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, பிரான்ஸ் அரசு நிர்வாகத்தின் கீழ் இயங்கும் (Établissement public) இந்த பள்ளியில் சுமார் 800 மாணவர்கள் கல்வி கற்கின்றனர். வழக்கம் போல இன்று ஆசிரியர் மற்றும் மாணவர்கள் சங்கீத பாட கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த போது மேற்குறித்த மாணவன் தீடிரென ஆசிரியருக்கு முன் கத்தியுடன் வந்து ஆசிரியரின் முகத்தில் தாக்கியுள்ளார், அடுத்த கணமே தனது துவிச்சக்க...
Global daily tamil news and updates