1. தமிழரசுக் கட்சி தனித்துப் போட்டி!! எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் வடக்கு கிழக்கு அனைத்து இடங்களிலும் தமிழரசுக் கட்சி தனித்து போட்டியிடும் என அக்கட்சியின் அரசியல் குழு தீர்மானித்துள்ளது.
பிரான்ஸ் நாட்டுப் பெண்ணொருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக கண்டி சுற்றுலா பொலிஸ் பிரிவினர் தெரிவித்தனர்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினர்கள் சிலர் தேசிய மக்கள் சக்தியுடன் இணைவதற்கு விருப்பம் வெளியிட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இதனை சுதந்திரக்கட்சியின் கெஸ்பாவ தொகுதி அமைப்பாளர் சட்டத்தரணி கீர்த்தி உடவத்தை தெரிவித்துள்ளார்.
ரம்புக்கனை - கப்பல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் மது அருந்திக்கொண்டிருந்த இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாய்தார்க்கம் கைகலப்பாக மாறியதில் ஒருவர் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் இன்று (04) நாட்டுக்கு வருகை தரவுள்ள நிலையில் ஜனாதிபதி அனுர குமார இந்தியாவுக்கு செல்லலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, அடுத்து வரவுள்ள தேர்தலில் போட்டியிட, அவர் வைத்திருக்கும் ஜனாதிபதி மன்னிப்பு தொடர்பான ஆவணங்களை தேர்தல் ஆணையம் கோரியுள்ளது.