இந்தா இந்த காப்பு ரெண்டையும் போடு… உனக்கு ஒன்டும் போடாம வெளிக்கிடுத்தி கொண்டு வந்திருக்கிறன் என்டு உன்ர கொப்பர் என்னை தான் திட்டுவார்.. கெதியா வெளிக்கிடு…’ என்று அவசரப்படுத்திவிட்டு போகும் தாயை பார்க்க எரிச்சலாக இருந்தது அவளுக்கு. காத்திருந்து அவரசமாக கன்னத்தில் விழுந்து கரை புரண்டோடிய கண்ணீரை துடைத்துக்கொண்டு தாய் கொடுத்த வளையல்களை எடுத்து கையில் மாட்டினாள் அவள். அவளுடைய பெரியம்மாவின் மகளின் திருமணம் இன்று. வீட்டில் எல்லோரும் தயாராகிக் கொண்டிருந்தார்கள். பல மாதங்களாக இந்த திருமண நாளிற்காக அவள் கூட காத்திருந்தாள்தான். அக்காவின் திருமணம் என்றால் அது பெரிய கொண்டாட்டம் தானே? திருமண பேச்சுதொடங்கிய நாளிலிருந்து ஒரே கொண்டாட்டம் தான். ஆனால் இன்று அங்கு போகும் மனநிலை இல்லை அவளுக்கு. கையினுள் நுழைய மறுக்கும் வளையலை அழுத்தி தள்ளினாள், அந்த மெல்லிய வளையல் அவள் அழுத்திய வேகத்தில் சற்று நெளிந்து கையின் மணிக்கட்டை கீறியது.. ‘ஸ்ஸ்ஸ்…’ என்று கையை உதறியபடி கண்ணாடிமுன்னால் கிடந்த கதிரையில் அமர்ந்தாள். தொண்டைக்குழியில் நெருப்பால் சுட்டது போல் ஓர் வலி, கண்கள் எரிந்து கொண்டு பொறுமையிழந்த கண்ணீர் வெளிய...
Global daily tamil news and updates