புதன்கிழமை, செப்டம்பர் 24, 2025
இன்றைய தினம் பிரான்சின் பாஸ்-ரைன் (Bas-Rhin) மாவட்டத்தில், ஸ்ட்ராஸ்போர்க் (Strasbourg) நகருக்கு அருகே உள்ள பென்ஃபெல்ட் (Benfeld) என்ற சிறிய நகரில் உள்ள ராபர்ட்-ஷூமன் கல்லூரியில் (Collège Robert-Schuman) ஆசிரியர் ஒருவரை அதே கல்லூரியில் பயிலும் மாணவர் ஒருவர் தாக்கியுள்ளார்.
இன்று காலை 8:15 மணியளவில் குறித்த கல்லூரியில் பயிலும் 14 வயதுடைய மாணவன் கல்லூரியில் சங்கீத ஆசிரியராக பணியாற்றும் 66 வயதுடைய பெண் ஆசிரியரை கத்தியால் தாக்கியுள்ளார். இந்த சம்பவம் பிரான்ஸ் கல்வி முறையில் (Système éducatif français) பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
பிரான்ஸ் அரசு நிர்வாகத்தின் கீழ் இயங்கும் (Établissement public) இந்த பள்ளியில் சுமார் 800 மாணவர்கள் கல்வி கற்கின்றனர். வழக்கம் போல இன்று ஆசிரியர் மற்றும் மாணவர்கள் சங்கீத பாட கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த போது மேற்குறித்த மாணவன் தீடிரென ஆசிரியருக்கு முன் கத்தியுடன் வந்து ஆசிரியரின் முகத்தில் தாக்கியுள்ளார், அடுத்த கணமே தனது துவிச்சக்கர வண்டியில் கல்லூரி வளாகத்தை விட்டு தப்பி ஓடியுமுள்ளார்.
இதனையடுத்து காவல்துறையினருக்கு தகவலளிக்கப்பட்டது. சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு ஒரு பொது இடத்தில் வைத்து தப்பி சென்ற மாணவன் கைது செய்யப்பட்டார். மாணவனின் இந்த நடத்தைக்கு பின்னணியில் பயங்கரவாத தொடர்பு (Lien terroriste) இருக்கிறதா என்பது தொடர்பிலான விசாரணைகளை தேசிய பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றம் (Parquet national antiterroriste) முன்னெடுத்துள்ளது.
காயமடைந்த ஆசிரியருக்கு உடனடியாக முதலுதவி வழங்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக ஸ்ட்ராஸ்போர்க் மருத்துவமனைக்கு (Centre hospitalier de Strasbourg) கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு உயிராபத்துகள் எதுவும் இல்லை என ஹோட்பியர் மருத்துவமனை (Hôpital de Hautepierre) தரப்பு தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன. வைத்தியசாலையின் அவசர மருத்துவ குழு (Pompiers et SAMU) உடனடியாக தேவையான சிகிச்சைகளை வழங்கியுள்ளனர்.
பொலிஸ் காவலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதான 14 வயது மாணவன் தனது கழுத்தில் கத்தியால் குத்திக் கொண்டு தற்கொலை செய்ய முயன்றுள்ளார். இதனையடுத்து அவருக்கும் முதலுதவி வழங்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக டிராகன் 67 ஹெலிகாப்டர் (Dragon 67 hélicoptère) மூலம் ஸ்ட்ராஸ்போர்க் மருத்துவமனையின் (CHU de Strasbourg Hautepierre) அவசர சிகிச்சைப் பிரிவிற்கு எடுத்து செல்லப்பட்டார். மாணவனின் உடல் நிலை குறித்து எந்த தகவலும் இன்னும் வெளியாகவில்லை.
விசாரணைகளில் இருந்து இந்த மாணவன் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டவர்(Profil perturbé) என்றும், முன்னர் உளநல பிரச்சனைகள் தொடர்பில் குடும்ப பராமரிப்பு (Famille d'accueil) நிலையத்தில் பராமரிக்கப்பட்டு பின்னர் பேய் (Foyer) போன்ற அமானுஷ்யம் சார்ந்த உளவியல் பிரச்சனைகளுக்கு தீர்வு வழங்கும் மையத்திற்கு மாற்றப்பட்டார் என்றும் தெரியவந்துள்ளது.
மேலும் பள்ளி சுவர்களில் நாஜி டேக்குகளை (Tags nazis) வரைந்ததாகவும், ஹிட்லரால் (Fasciné par Hitler) உளரீதியாக தீவிரமாக ஈர்க்கப்பட்டிருக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இவருக்கு பின்னணியில் பயங்கரவாத தூண்டுதல் (Incitement terroriste) உண்டா அல்லது தீவிரவாத கருத்துக்களுடன் (Idéologie extrémiste) தொடர்புடையவரா போன்ற கோணங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
Comments
Post a Comment