‘ டேய் மச்சான் இதோட சரிடா.. இனிமேல் அவளோட நான் கதைச்சிட்டா பாரேன்.. ‘ என்றான்ஒருவன். ‘ டேய்.. என்னடா நடந்த.. இப்ப மூணு மாசமோ என்னவோ தானோ நீ அவள லவ் பண்ற.. அதுக்குள்ள என்னடா சண்ட.. ‘ என்றான் இன்னொருவன். ‘ பொண்ணாடா அவ.. ராட்சசி.. ஒரு கிஸ் பண்ணன்டா.. ஏதோ ரேப் பண்ண மாதிரி ஓவரா பண்றாடா.. ‘ என்றான் கையிலிருந்த பியரை குடித்தபடி. ‘ டேய் லவ்ல இந்த சண்டெயல்லாம் ஒரு விசயமே இல்ல.. கல்யாணம் முடிச்ச அனுபவசாலி சொல்றன் கேட்டு நடந்துகொள்ளு.. ‘ என்று சொல்லி நக்கலடித்தான் மற்றவன். ‘ ஆமா ஆமா நீயும் உன் கலியாணமும்.. டேய்.. மச்… மச்சான்.. ராஜ்.. அடேய்.. பிருத்விராஜ்.. ‘ என்று உளறிக்கொண்டு அந்தபக்கமாக திரும்பி கைபேசியில் ஏதோ பேசிக்கொண்டிருந்த பிருத்விராஜீன் தோளை தட்டினான் பிருத்வியின் நண்பன். அன்று ஞாயிற்றுக்கிழமை நண்பர்கள் மூவரும் சேர்ந்து குடித்துக் கொண்டிருந்தனர் அந்த ரெஸ்டோரன்டில். அழைப்பை துண்டித்து விட்டு திரும்பி ‘ டேய் மனுசனாடா நீங்க.. ஒரு போன் கதைக்க விடாம கத்துறீங்களேடா.. ‘ என்றான் பிருத்வி. ‘ மச்சான்.. ...
Global daily tamil news and updates