பிரான்சின் Juvisy-sur-Orge (Essonne) நகரில் செப்டம்பர் 13, 2025 சனிக்கிழமையன்று நண்பகல் காரொன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து Gare de Juvisy-sur-Orge (Juvisy-sur-Orge ரயில் நிலையம்) அருகிலுள்ள fast-food உணவகத்தின் (restaurant fast-food) கண்ணாடி வாசலை உடைத்துக் கொண்டு உள்ளே பாய்ந்ததில் விபத்து ஏற்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது, காரின் சாரதியான 95 வயது முதியவருக்கு காரை செலுத்திக் கொண்டிருக்கும் பொழுது திடீரென மயக்க நிலை ஏற்பட்டதால் கார் வேகக் கட்டுப்பாட்டை இழந்து உணவகத்திற்குள் பாய்ந்துள்ளது.
விபத்தின் போது உணவகத்திற்குள் இருந்த வாடிக்கையாளர்களை சிலருக்கும் காயங்கள் ஏற்பட்டுள்ளன இருப்பினும் எவரும் பலத்த காயங்களுக்கு உள்ளாக்கவில்லை என காவல்துறை (police Juvisy-sur-Orge) தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
Juvisy-sur-Orge ரயில் நிலையம் (Gare de Juvisy-sur-Orge), பாரிஸ் (Paris) நகருக்கு அருகிலுள்ள , இந்த நகரத்தின் மிகவும் நெரிசல் நிறைந்த இடங்களில் ஒன்று. தினசரி கிட்டத்தட்ட 90,000 பயணிகள் (voyageurs RER) RER D மற்றும் RER B ரயில்கள் மூலம் பயணம் செய்கின்றனர். இதனால் இங்கு எப்பொழுதும் அதிகமாக பயணிகள் (passagers) நடமாட்டம் இருப்பது வழக்கம்.
இந்த எதிர்பாராத விபத்து காரணமாக fast-food உணவக(fast-food restaurant)த்திற்கும் இருந்தவர்கள் மிகுந்த அச்சமடைந்தனர். மேலும் அவர்களில் சிலர் காயங்களுக்கு உள்ளாகியிருந்த நிலையில், சம்பவ இடத்திற்கு வருமாறு Samu (Service d'Aide Médicale Urgente) மற்றும் அவசர மருத்துவக் குழு (équipe médicale d'urgence) அழைக்கப்பட்டு காயங்களுக்கு உள்ளானவர்களுக்கு மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டது.
சம்பவம் குறித்து பொலிஸார் மேலும் தெரிவிக்கையில், 1930ஆம் ஆண்டு பிறந்த 95 வயது சாரதி (conducteur âgé de 95 ans), தனது மனைவியுடன் (sa femme) காரில் (voiture) சென்று கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்ததால், வாகனம் (véhicule) கட்டுப்பாட்டை இழந்து உணவகத்தின் baie vitrée (கண்ணாடி வாசல்) ஐ உடைத்துக் கொண்டு உள்ளே பாய்ந்துள்ளது.
சாரதிக்கு எந்த காயமும் ஏற்படவில்லை, ஆனால் அவரது 77 வயது மனைவி (femme de 77 ans) காயங்களுக்குள்ளாகி மருத்துவமனையில் (hôpital) அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவரது உடல் நிலை குறித்து எந்தவொரு தகவலலும் வெளியிட முடியாது என்று மருத்துவர்கள் (médecins) தெரிவித்துள்ளனர்.
விபத்தினால் உணவகத்திற்கு அதிக சேதம் ஏற்ப்பட்டுள்ளது. உணவகத்தின் முழு கண்ணாடி வாசல் (baie vitrée brisée) உடைந்து, உள்ளே உள்ள சில பொருட்கள் (meubles) சிதறியுள்ளன. Juvisy-sur-Orge நகராட்சி (mairie de Juvisy-sur-Orge) அதிகாரிகள் தற்காலிகமாக அந்த உணவகத்தை மூடியுள்ளனர்
மேலும் சேதத்தை சரிசெய்யும் பணிகள் (travaux de réparation) ஆரம்பிக்கப்பட்டுள்ளன. விபத்து தொடர்பிலான மேலதிக சட்ட பூர்வ நடவடிக்கைகளை காவல்துறை முன்னெடுத்துள்ளது.
Comments
Post a Comment