ஐரோப்பிய யூனியன் (European Union) நாடுகளான பிரான்ஸ் (France), ஸ்பெயின் (Spain), போர்த்துக்கல்(Portugal) மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளில் விளையாடப்படும் சர்வதேச சீட்டிழுப்பு (International Lottery) விளையாட்டின், கடந்தவார சீட்டிழுப்பில் பிரான்ஸ் குடியுரிமை கொண்ட நபர் ஒருவர் ஒரு மில்லியன் யூரோ (Million Euros) பரிசினை வென்றுள்ளார்.
இதில் சிறப்பான விடயம் என்னவென்றால் இதே நபர் ஏற்கனவே கடந்த 2023 ஆம் ஆண்டு நடந்த யூரோமில்லியன் (EuroMillions) விளையாட்டிலும் ஒரு மில்லியன் யூரோ (Million Euros) பரிசினை வென்றிருந்தார். இவ்வாறு இரண்டு ஆண்டுகளுக்குள் இரண்டு முறை பரிசை வென்றுள்ளமை அனைவரையும் ஆச்சரியத்திற்குட்படுத்தியுள்ளது.
பிரான்ஸின் அதிகாரப்பூர்வ சீட்டிழுப்பு நிறுவனமான ஃப்ரான்செஸ் டெஸ் ஜியூ (Française des Jeux - FDJ) இவரது இந்த வெற்றியை உறுதிப்படுத்தியுள்ள நிலையில் லொட்டரி உலகிலும் இந்நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பரிசுத்தொகையானது யூரோமில்லியன் (EuroMillions) இன், மை மில்லியன் (My Million) என்ற சிறப்பு பிரெஞ்ச் டிரா (French Draw) மூலம் கிடைத்துள்ளதாக FDJஇன் அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரெஞ்ச் டிரா (French Draw) என்பது யூரோமில்லியன் (EuroMillions) விளையாட்டில் பங்கேற்போருக்கு தினசரி ஒரு மில்லியன் யூரோ (Million Euros) பரிசு (Prize) வழங்கும் திட்டம் (Scheme) ஆகும். இந்த திட்டம் 2004 ஆம் ஆண்டு முதன் முதலில் ஆரம்பிக்கப்பட்டது.
பிரான்ஸை சேர்ந்த பரிசை வென்ற அதிஷ்டசாலி தற்போது இத்தாலியின் அழகான நகரங்களில் ஒன்றான வெனீஸ் (Venice) இல் வசித்து வருகிறார். அண்மையில் விவாகரத்து செய்து கொண்ட இவர் தற்போது மீண்டும் தனது முன்னாள் காதலியுடன் இணைந்து வாழத் தொடங்கியுள்ளார். இந்நிலையில் இந்த வெற்றி அவரது வாழ்க்கையில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்துமென எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து சீட்டிழுப்பு நிபுணர்கள் (Lottery Experts) தெரிவிக்கையில், இரண்டு வருடங்களுக்குள் ஒரு நபர் இரண்டு தடவைகள் ஒரு மில்லியன் யூரோ வெல்வது மிகவும் அரிதான நிகழ்வாகும்(Rare Event) என்கிறார்கள்.
ஐரோப்பிய நாடுகளில் விளையாடப்படும் சர்வதேச சீட்டிழுப்பு விளையாட்டான யூரோமில்லியன் (EuroMillions) விளையாட்டில் வாரத்திற்கு இரண்டு முறை டிரா (Draws) நடைபெறுகின்றன, மற்றும் ஜாக்பாட் (Jackpot) தொகை சில சமயங்களில் 200 மில்லியன் யூரோ (200 Million Euros) வரை கிடைக்க கூடியதாக இருக்கும். பிரான்ஸின் மிகப்பெரிய சீட்டிழுப்பு நடத்துனரான FDJ (Française des Jeux) நிறுவனம் இந்த விளையாட்டை நிர்வகிக்கிறது.
பிரான்ஸ் சார்பில் நடாத்தப்படும் சீட்டிழுப்பு விளையாட்டு வெனிஸ் போன்ற சுற்றுலாத் தளங்களில் மிகப் பிரபலமாகவும் ஒன்லைன் மூலம் கிடைக்கக் கூடியதாகவும் இருப்பதனாலேயே குறித்த பிரெஞ்சு நபருக்கு அதிஷ்டம் கைகொடுத்துள்ளது, இந்நிகழ்வானது லொட்டரி ஆர்வலர்கள் மட்டுமன்றி அனைத்து தரப்பினருக்குள்ளும் ஒரு ஆர்வத்தை தூண்டியுள்ளது எனலாம்.
2004 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த விளையாட்டில் இதுவரையில் பல பில்லியன் யூரோக்கள் வரை பரிசுகள் வெல்லப்பட்டுள்ளன. இந்த நிகழ்வுகளை எல்லாம் ஒருங்கிணைத்து நடாத்தும், பிரான்ஸ் அரசின் கீழ் இயங்கும் FDJ (Française des Jeux) நிறுவனம் 2024 ஆம் ஆண்டில் 3 பில்லியன் யூரோ வருவாய் ஈட்டியுள்ளது.
இந்த அரிய வெற்றி, உங்கள் வாழ்க்கையையும் மாற்றலாம், யூரோமில்லியன் விளையாட்டை சரியான முறையில் விளையாடி வெற்றியாளராக, யூரோமில்லியன் (EuroMillions) பற்றி மேலும் தகவல்களை அறிந்து கொள்ள, FDJ (Française des Jeux) உத்தியோகபூர்வ இணையதளத்தை (Official Website) பார்வையிடவும்.
Comments
Post a Comment