பாரிஸ் ஐந்தாவது நிர்வாக பிரிவில் பரிஸ் அமெரிக்கன் அக்கடமி கட்டிடத்தில் நிகழ்ந்த பெரும் வெடிப்புசம்பவத்தில் பெண்ணொருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.50 வயதான தையல்ஆசிரியரான இவர் வெடிப்பு சம்பவம் இடம்பெற்ற போது மூன்றாவது தளத்தில் நின்றதாகதெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் சேதமடைந்த இடிபாடுகளிடையே இவர் சிக்கி உயிரிழந்து இருக்கலாம் எனஅஞ்சப்படுகின்றது.சம்பவம் நிகழ்நத இடத்தில் இடிபாடுகளை அகற்றும் பணிகள் அயல் கட்டிடங்களும்சேதமடையலாம் என்ற நிலையை கருத்தில் கொண்டு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
பெரும் தீ,கட்டிட சேதங்களை ஏற்படுத்திய அந்த வெடிப்பு சம்பவத்தின் காரணம் இன்னும் தெரியவில்லைஎனவும் எரிவாயு மணம் வீசியதாக சாட்சிகள் குறிப்பிட்டதை வைத்து எரிவாயு குழாய் கசிவினால்வெடித்திருக்கலாம் என்று சொல்லப்படுகின்றது.
பாரிஸ் மக்களை பெரும் பீதிக்கு உட்படுத்திய இந்த சம்பவத்தினால் ஐம்பது பேர்வரைகாயமடைந்துள்ளனர்.சிலருக்கு செவிப்பறை பாதிப்படைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.வெடிப்பின்அதிர்ச்சி,பெரும் தீயை நேரில் பார்த்தோர் அது விமான குண்டு வீச்சு என தெரிவித்திருந்தமையும்குறிப்பிடதக்கது.
Comments
Post a Comment