Friday 4 October 2024

அனுர அரசின் அடுத்த அதிரடி!!

 




இலங்கையில் சர்ச்சையை ஏற்படுத்திய தேசிய மட்ட குற்றங்கள், மோ9சடிகள் மற்றும் ஏனைய விசேட குற்றச் செயல்கள் தொடர்பாக ஆராயப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



  இலங்கை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு விசாரணைகளின் முன்னேற்றம் குறித்த மீளாய்வு பொலிஸ் தலைமையகத்தில் நேற்றையதினம் (3) பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன தலைமையில் நடைபெற்றது.

இங்கு தற்போது என்ன விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன, தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள விசாரணைகள் என்ன, அவ்வாறு நிறுத்தப்படுவதற்கு அரசியல் காரணங்கள் உள்ளதா, தேவையில்லாமல் தாமதப்படுத்தப்பட்ட விசாரணைகள் என்ன, என்ன விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்? என விவாதிக்கப்பட உள்ளன.

சில விசாரணைகள் பாதிக்கப்பட்டுள்ளதா, இல்லையெனில் தாமதத்திற்கான காரணங்கள் என்ன என்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய, குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் பல சிரேஷ்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இந்த விடயங்கள் தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று தயாரிக்கப்பட்டு மேலதிக கலந்துரையாடல்கள் நடத்தப்படவுள்ளடன், பல முக்கிய கலந்துரையாடல்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும்  குறிப்பிடப்பட்டுள்ளது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt

No comments:

Post a Comment

இஸ்ரேல் - லெபனான் மோதலால் தஞ்சமடைந்த இலங்கையர்கள்!!

  இஸ்ரேல் - லெபனான் மோதல் காரணமாக 32 இலங்கையர்கள் லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள இலங்கை தூதரகத்தில் தஞ்சம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு...