உலக கோடீஸ்வரர்களில் ஒருவரான பில்கேட்ஸ் இலங்கைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய தினம் , டிஜிற்றல் விவசாய மாற்றுத்திட்ட முன்னேற்றம், ஊட்டச்சத்து குறைபாட்டை நிவர்த்தகக்கும் உணவு வழங்கும் திட்டம் மற்றும் கால்நடை வளர்ப்பு மற்றும் காலநிலை முன்முயற்சிகள் மீதான ஒத்துழைப்பு என்பவை குறித்து, கேட்ஸ் அறக்கட்டளையின் ஆலோசகர் சந்தித்த சமரநாயக்க, , ஜனாதிபதியின் ஆலோசகரைச் சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
இலங்கை அரசாங்கத்திற்கும் கேட்ஸ் அறக்கட்டளைக்கும் (Gates Foundation) இடையிலான பங்காளித்துவத்தை முறைப்படுத்துவதற்கு விரைவில், ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவை சந்திக்க கேட்ஸ் அறக்கட்டளையின் (Gates Foundation) தலைமை நம்புவதாக அறக்கட்டளை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
No comments:
Post a Comment