யாழ். தேர்தல் மாவட்டத்தில் எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான கட்டுப்பணத்தினை 8 சுயேட்சைக் குழுக்கள் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகரும் பதில் மாவட்ட செயலாளருமான மருதலிங்கம் பிரதீபன் இதனைத் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இன்று (03-10-2024) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் பணிகள் நாளை (04-10-2024) ஆரம்பமாகவுள்ளன.
இதற்கமைய, எதிர்வரும் 11ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை வேட்புமனுக்களை சமர்ப்பிக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt
No comments:
Post a Comment