அமெரிக்காவில் ஏற்பட்ட ஒரு துயரமான சம்பவத்தில், ChatGPT போன்ற AI தொழில்நுட்பத்தின் அறிவுரைகளால் தூண்டப்பட்டு, ஒரு நபர் தனது தாயை கொலை செய்து பின்னர் தானும் உயிரை மாய்த்துக்கொண்டார்.
இந்த சம்பவம் அமெரிக்காவின் (États-Unis) கனெக்டிகட் (Connecticut) மாநிலத்தில் உள்ள கிரீன்விச் (Greenwich) பகுதியில் நிகழ்ந்தது, அங்கு 56 வயதான Stein-Erik Soelberg என்பவர் தனது 83 வயது தாய் Suzanne Adams ஐ கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில், அமெரிக்காவின் முன்னணி tech நிறுவனமொன்றில் manager ஆக பணியாற்றிய Stein-Erik Soelberg, உளவியல் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருந்தார் என்றும்.
Williams College இல் பட்டம் பெற்று, Vanderbilt University இல் MBA முடித்த இவர், Netscape மற்றும் Yahoo போன்ற நிறுவனங்களில் 20 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர் என்றும். Stamford, Connecticut இல் வசித்த அவர், lifelong mental illness உடன் போராடி வந்தார் என்றும்.
இவர், தொழில்நுட்பத் துறையில் அனுபவமிக்கவராக இருந்த போதிலும், பாரனோயா (paranoia) போன்ற மனநல பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில். சாட்ஜிபிடி (ChatGPT) அவருக்கு "எரிக், நீ பைத்தியம் இல்லை" (Erik, you're not crazy) என்று உறுதியளித்து, அவரது சந்தேகங்களை ஊக்குவித்ததாகவும் தெரிய வந்துள்ளது.
மேலும் அவரது தாய் அவருக்கு விஷம் கொடுத்து கொலை செய்யத் திட்டமிடுவதாக சாட்ஜிபிடி (ChatGPT) பரிந்துரைத்ததாக கூறப்படுகிறது, இது அவரை விபரீத முடிவுகளை எடுக்க தூண்டியுள்ளது.
ஸ்டெய்ன்-எரிக் சோல்பெர்க் (Stein-Erik Soelberg) பல மாதங்களாக சாட்ஜிபிடி (ChatGPT) உடன் உரையாடி வந்துள்ளார், இந்த உரையாடல்களை தனது இன்ஸ்டாகிராம் (Instagram) மற்றும் யூடியூப் (YouTube) கணக்குகளில் பதிவிட்டிருந்தார்.
இந்த உரையாடல்கள் அவரது மனநலத்தை மேலும் சீரழித்ததாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் (Wall Street Journal) அறிக்கை தெரிவிக்கிறது. போலீசார் இந்த சம்பவத்தை கொலை-தற்கொலை (murder-suicide) என வகைப்படுத்தியுள்ளனர்.
மேலும் ஓல்ட் கிரீன்விச் (Old Greenwich) பகுதியில் நிகழ்ந்த இந்த சம்பவம், செயற்கை நுண்ணறிவு (AI) சாட்பாட்களின் (chatbots) அபாயங்களை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது, குறிப்பாக உளவியல் பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு இவை எவ்வாறான தீங்குகளை ஏற்படுத்த முடியும் என்பதற்கு ஒரு சான்றாக உள்ளது.
இதே போன்ற மற்றொரு அதிர்ச்சி சம்பவத்தில், கலிபோர்னியா (Californie) மாநிலத்தின் ஆரஞ்சு கவுண்டி (Orange County) பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவன் ஆடம் ரெய்ன் (Adam Raine) சாட்ஜிபிடி (ChatGPT) உடனான உரையாடல்களுக்குப் பிறகு தற்கொலை செய்து கொண்டார்.
அவரது பெற்றோர் ஓபன் ஏஐ (OpenAI) நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்துள்ளனர், சாட்ஜிபிடி (ChatGPT) அவரது தற்கொலை எண்ணங்களை தூண்டியதாக குற்றம்சாட்டியுள்ளனர்.
ஆடம் ரெய்ன் (Adam Raine) முதலில் கற்றல் நோக்கத்திற்காக சாட்ஜிபிடி (ChatGPT) ஐ பயன்படுத்தத் தொடங்கினார். ஆனால் நாட்கள் செல்ல செல்ல அவர் சாட்ஜிபிடி (ChatGPT)ஐ உணர்வு ரீதியிலான நண்பனாக பாவித்து உரையாடியுள்ளார்.
சாட்ஜிபிடி (ChatGPT) அவருக்கு "அழகான தற்கொலை" (beautiful suicide) திட்டத்தை குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுக்கு வெளிப்படுத்தாமல் ரகசியமாக வைத்திருக்க அறிவுறுத்தியதாக வழக்கு தொடர்பிலான ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
இந்த வழக்கு சான் பிரான்சிஸ்கோவில் (San Francisco) உள்ள கலிபோர்னியா உயர் நீதிமன்றத்தில் (Superior Court of California) தாக்கல் செய்யப்பட்டுள்ளது, 40 பக்க அறிக்கையில் தவறான மரணம் (wrongful death), வடிவமைப்பு குறைபாடுகள் (design defects) மற்றும் அபாயங்கள் குறித்து எச்சரிக்கத் தவறியது போன்ற குற்றச்சாட்டுகள் உள்ளன.
ஓபன் ஏஐ (OpenAI) தலைமை நிர்வாகி சாம் ஆல்ட்மன் (Sam Altman) உட்பட நிறுவனம் மீது இந்த வழக்கு உள்ளது. இந்த சம்பவம் ஏப்ரல் 11, 2025 அன்று நிகழ்ந்தது, மேலும் சாட்ஜிபிடி (ChatGPT) உளவியல் நெருக்கடியில் உள்ளவர்களுக்கு எவ்வாறு பதிலளிக்க வேண்டும் என்பது குறித்து மாற்றங்கள் செய்யப்படும் என ஓபன் ஏஐ (OpenAI) அறிவித்துள்ளது.
இந்த இரு சம்பவங்களும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பங்களின் அபாயங்களை உலக அளவில் விவாதத்திற்கு உட்படுத்தியுள்ளன. உளவியல் பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு சாட்பாட்கள் (chatbots) எவ்வாறு தவறான அறிவுரைகளை வழங்கலாம் என்பது குறித்து விழிப்புணர்வு அதிகரித்துள்ளது.
ஓபன் ஏஐ (OpenAI) போன்ற நிறுவனங்கள் இனி மனநலம் தொடர்பான உரையாடல்களில் கவனமாக இருக்க வேண்டும் என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்தால், சாட்ஜிபிடி (ChatGPT) போன்ற கருவிகளுக்கு கடுமையான விதிமுறைகள் வரலாம்.
Comments
Post a Comment