உலகளவில் இரத்த தானம் என்பது ஒரு புண்ணிய செயலாக கருதப்படுகிறது. இருப்பினும் இரத்தம் என்பது ஒரு உயிரை காக்க எவ்வளவு முக்கியமோ அதே போல் ஒரு நபரிடம் இருந்து பெறப்படும் இரத்தம் அதை பயன்படுத்தவுள்ள நோயாளிக்கு எந்தவொரு கெடுதலையும் செய்துவிடக் கூடாது என்பதும் மிகவும் முக்கியமாகும். இதற்காக இரத்த தானத்தில் சில கட்டுப்பாடுகள், விதிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகிறது.
இதில் மிகவும் முக்கியமானதொரு கட்டுப்பாடாக ஒரு நபர் Tattoo(பச்சை குத்துதல்) மற்றும் Piercing (உடல் பாகங்களில் துளையிட்டு தங்கம் வெள்ளி போன்ற ஆபரணங்களை அணிந்து கொள்ளுதல்) செய்த பின்னர் குறிப்பிட்டதொரு காலம் வரை இரத்த தானம் செய்ய கூடாது என்பதாகும்.
பிரான்சில் இதுவரை காலமும் இந்த கால அவகாசம் நான்கு மாதங்களாக இருந்தது ஆனால் நாளைய தினம் (செப்டம்பர் 1 2025) முதல் இந்த கால அவகாசம் இரண்டு மாத காலமாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி இரத்த தானம் செய்பவர்களுக்கும் இரத்த வங்கிகளுக்கும் மகிழ்ச்சியளிக்கிறது.
பிரான்ஸ் இரத்த வங்கிகளில் இருப்பு குறைவாக இருக்கும் சூழ்நிலையில் இது போன்ற மாற்றங்கள், donors எண்ணிக்கையை அதிகரிக்க உதவும் என EFS(Établissement français du sang) எதிர்பார்க்கிறது.
மேலும், endoscopie souple அல்லது acupuncture போன்ற மருத்துவ நடைமுறைகள் பிறகும் இரத்த தானம் செய்ய வெறும் 2 மாத கால அவகாசம் போதும் என புதிய விதிகள் கூறுகின்றன. இந்த மாற்றம், இரத்த தானத்தை எளிதாக்கி அதிகமான மக்களை இரத்த தானம் செய்ய தூண்டுவதாக அமைந்துள்ளது.
கடந்த 2022ம் ஆண்டில், gay men-க்கான இரத்த தான தடை நீக்கப்பட்டது, இது பாலின சமத்துவத்தை ஊக்குவிக்கும் முக்கிய நிகழ்வாக இருந்தது. இப்போது, tattoo மற்றும் piercing போன்ற நவீன வாழ்க்கை முறை தெரிவுகள் மீதான விதிகள் தளர்த்தப்பட்டுள்ளமை இளைஞர்களுக்கு இரத்த தானம் மீதான ஆர்வத்தை தூண்டும்.
மேலும், பிரான்ஸ் அரசு மற்றும் EFS, இரத்த தானத்தை ஊக்குவிக்க பல்வேறு பிரச்சாரங்களை நடத்தி வருகின்றன. உதாரணமாக, rare blood types உள்ளவர்களை ஊக்குவிப்பது, plasma donation-ஐ அதிகரிப்பது போன்றவை. இந்த மாற்றம், பிரான்ஸின் சுகாதார அமைப்பில் neonatal screening மற்றும் பிற மருத்துவ தேவைகளுக்கு பெரிய உதவியாக இருக்கும்.
இந்த மாற்றங்கள், சுகாதாரத் துறையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். நீங்களும் இரத்த தானம் செய்ய தகுதியுடையவரா? என்பதை EFS இணையத்தளத்தினூடாக அறிந்து கொள்ளலாம்.

Comments
Post a Comment