பிரான்ஸ் அரசின் முக்கியமான சமூக உதவித் திட்டங்களில் ஒன்றான AEEH (Allocation d'éducation de l'enfant handicapé), குறைபாடுடைய குழந்தைகளின் கல்வி மற்றும் வளர்ச்சிக்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டமானது வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு நிதி ரீதியில் பாரிய பக்கங்களிப்பை செய்கிறது, குறிப்பாக குழந்தைகளின் கல்வி செலவுகள், சிகிச்சை மற்றும் தினசரி தேவைகளை சமாளிக்க உதவுகிறது.
அண்மையில் கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி 2025 ஏப்ரல் 1 முதல் இந்த உதவித் தொகை மதிப்பீடு செய்யப்பட்டு, அடிப்படைத் தொகை €151.80 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது 2024 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட தொகையை விட 1.7% அதிகமாகும்.
மேலும், 2026 ஏப்ரல் 1 முதல், இந்த உதவி அனைத்து குறைபாடுடைய குழந்தைகளுக்கும் கிடைக்கும் வகையில் ஒழுங்குபடுத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது, இது மருத்துவ செலவுகளை சமாளிக்க தடுமாறும் குடும்பங்களுக்கு பேருதவியாக இருக்கும்.
AEEH என்பது குழந்தையின் குறைபாடு தொடர்பான செலவுகளை சமாளிக்க உதவும் ஒரு மாதாந்திர உதவித் தொகை. இது 20 வயது வரையிலான குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது, ஆனால் ஒருவர் எவ்வளவு தீவிரமான குறைப்பாட்டை கொண்டிருக்கிறார் என்பதை பொறுத்தே உதவித்தொகை எவ்வளவு காலம் வழங்கப்பட வேண்டும் என்பது தீர்மானிக்கப்படும்.
உதாரணமாக, ஒரு நபர் 80% அல்லது அதற்கு மேல் குறைபாட்டை கொண்டிருப்பாரானால் உதவி தொகையானது 20 வயது வரை அல்லது AAH (Allocation aux Adultes Handicapés) திட்டத்திற்கு குறித்த நபரை மாற்றும் வரை வழங்கப்படும்.
மாறாக ஒரு நபர் 50% முதல் 80% வரையிலான குறைபாட்டை கொண்டிருப்பாரானால் உதவி தொகையானது 2 முதல் 5 ஆண்டுகள் வரை வழங்கப்படும். இந்தத் திட்டம் குடும்ப வருமானத்தைப் பொறுத்தும் மாறுபடும், ஆனால் அடிப்படைத் தொகை €151.80.
மேலதிக செலவுகளுக்கு compléments AEEH என்று அழைக்கப்படும் 6 நிலைகள் உள்ளன:
நிலை 1: €265.65 (மாதாந்திர செலவுகள் €265.65 அல்லது அதற்கு மேல் இருந்தால்).
நிலை 6: €1,439.94 வரை, தனியாக வளர்க்கும் பெற்றோருக்கு €1,947.51 வரை மேஜர்.
இந்த உதவி குழந்தையின் கல்வி, சிகிச்சை அல்லது துணை உதவியாளர் செலவுகளுக்கு பயன்படுத்தப்படலாம். மேலும், பெற்றோர்கள் வேலை செய்யும் நேரத்தை குறைத்தாலோ அல்லது வேலை இல்லாமல் இருந்தாலோ உதவித்தொகை அதிகரிக்கப்படும்.
2025 ஆம் ஆண்டில், AEEH தொகை ஏப்ரல் 1 முதல் மதிப்பீடு செய்யப்பட்டு உயர்த்தப்பட்டுள்ளது. இது அரசின் சமூக பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வருடாந்திர மறு மதிப்பீடு (revaluation) ஆகும். குடும்பங்களுக்கு இது குறிப்பிடத்தக்க உதவியாக இருக்கும், குறிப்பாக உயரும் வாழ்க்கைச் செலவுகளுக்கு மத்தியில்.
மேலும், பிரான்ஸ் அரசு மக்கள் நலன் கருத்து மொத்தமாக 18 திட்டங்களை அறிவித்துள்ளது, இதில் AEEH திட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட மேற்குறித்த மாற்றங்களும் அடங்கும். இதில் சிறிய குறைபாடு முதல் தீவிரமான குறைபாடுடைய அனைத்து மாணவர்களும் உள்ளவங்கப்படுவர்.
இத்திட்டமானது ஏற்கனவே வழங்கப்படும் ARS (Allocation de Rentrée Scolaire) போன்ற திட்டங்களுடன் இணைந்து, குறும்பங்களுக்கு ஒரு மேலதிக நிதி ஆதரவாக விளங்குகிறது.
ARS என்பது பாடசாலை மீள திறக்கப்படும் போது கற்றல் உபகரணங்களுக்கனான செலவுகளை நிர்வகிக்க வழங்கப்படும் உதவித் தொகையாகும். 6-10 வயது குழந்தைகளுக்கு €423.48, 11-14 வயதுக்கு €446.85 வரை கிடைக்கும்.
இந்நிலையில் இதோடு AEEH உதவித் தொகையும் இணைந்து கிடைத்தால் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் பேருதவியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. ஆனால் இந்த உதவிகளை பெற்றுக்கொள்ள குறித்த நபர் சில அடிப்படை தகைமைகளை கொண்டிருக்க வேண்டும்.
20 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும்.
குறைபாட்டின் அளவு குறைந்தது 50% இருக்க வேண்டும்.
குடும்பம் பிரான்ஸில் நிரந்தர வசிப்பிட முகவரியைக் கொண்டிருக்க வேண்டும் (2025 ஜனவரி 1 முதல் இணைக்கப்பட்டுள்ள புதிய விதி).
குறித்த நபர் பாடசாலையிலோ அல்லது சிறப்பு நிறுவனத்திலோ இருந்தால் உதவி தொடரும்.
உதவியைப் பெற்றுக்கொள்ள MDPH (Maison Départementale des Personnes Handicapées) இல் விண்ணப்பிக்க வேண்டும்.
உதவி CAF (Caisse d'Allocations Familiales) அல்லது MSA (Mutualité Sociale Agricole) மூலம் வழங்கப்படும்.
பிரான்ஸில் சுமார் 435,000 மாணவர்கள் AEEH பெறுகின்றனர், இதில் 20 வயதுக்குட்பட்டவர்கள் 2.7% ஆகும். இது கல்வி தொடர்பிலான குடும்பங்களின் நிதிச்சுமையைக் குறைப்பதனால் அனைத்து மாணவர்களும் கல்வியை பெற்றுக்கொள்வதை உறுதிப்படுத்துகிறது.
அதிலும் குறிப்பாக ஒற்றை பெற்றோர் மற்றும் பெண் தலைமைத்துவ குடும்பங்களில் கல்வியை கொண்டு சேர்ப்பதில் பெரும் பங்களிப்பு செய்கிறது. மேலும் தற்போது புதிய விதிகள் இணைக்கப்பட்டுள்ள நிலையில் 2026 ஆம் ஆண்டில் மேலும் பல குடும்பங்கள் இதனூடாக பயனடைவார்கள்.
பிரான்ஸ் அரசின் 2025 நிதி சட்டத்தில், இது போன்ற சமூக உதவிகள் வலுப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் தகவலுக்கு, service-public.fr அல்லது monparcourshandicap.gouv.fr தளங்களைப் பார்க்கவும்.

Comments
Post a Comment