பிரான்சில் நாளைய தினம் (செப்டம்பர் 1 2025) முதல் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் இலவசமாக அறிய வகையிலான நோய் நிலைமைகளை கண்டறியும் பல பரிசோதனைகளை உள்ளடக்கிய Neonatal Screening திட்டம் நடைமுறைக்கு வருகிறது.
இதன் மூலம் Rare Genetic Diseases-ஐ கண்டறிய புதிய பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். ஒரு குழந்தை பிறந்து 2-3 நாட்களுக்குள் இந்த சேவை இலவசமாக வழங்கப்படும் இது குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு சிறந்ததொரு முயற்சியாக உள்ளது.
இதன் மூலம் Sickle Cell Disease (SCD) க்கான Universal Screening அறிமுகப்படுத்தப்படுவதுடன், Perigenomed Project மூலம் Genome Sequencing-ஐ பயன்படுத்தி பரிசோதனை செய்யும் வசதியும் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டம் பிரான்சின் பொது சுகாதார இலக்குகளுடன் இணைந்து, Sickle Cell Disease மற்றும் பிற மரபணு சார்ந்த நோய்நிலைமைகளை கண்டறியும் வகையிலான கடினமான பரிசோதனைகளையும் முன்னெடுக்கிறது.
Sickle Cell Disease (SCD) பிரான்சில், குறிப்பாக ஆப்பிரிக்க, கரீபியன், மற்றும் மத்திய கிழக்கு புலம்பெயர் சமூகங்களில் கண்டறியப்படும் முக்கியமான நோய் நிலைமையாக உள்ளது. இதனடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் Neonatal Screening உதவியோடு நோய் ஆரம்பத்திலேயே கண்டறியப்படுவதன் (Early Diagnosis) மூலம் குழந்தைகளின் இறப்பு விகிதங்களை (Mortality Rates) கணிசமாகக் குறைக்க முடியும்.
இந்த முறையில் பிரான்சில் உள்ள அனைத்து புதிதாகப் பிறந்த குழந்தைகளையும் உள்ளடக்கி, Cord Blood அல்லது Heel Prick Samples ஐப் பயன்படுத்தி HPLC (High-Performance Liquid Chromatography) மூலம் பரிசோதனை செய்யப்படுகிறது.
செப்டம்பர் 1, 2025 முதல் தொடங்கும் இந்த Neonatal Screening செயற்திட்டம், பிரான்சில் SCD மற்றும் பிற மரபணு நோய்களை கட்டுப்படுத்துவதற்கு ஒரு முக்கிய படியாகும். அரசின் இந்த முயற்சி, பெற்றோர்களுக்கு நம்பிக்கை அளிக்கிறது. செயற்திட்டம் தொடர்பான மேலதிக தகவல்களுக்கு பிரெஞ்சு அரசு சுகாதார இணையதளங்களைப் பார்வையிடவும்.

Comments
Post a Comment