நேற்று ஞாயிற்றுக் கிழமை (14 செப்டம்பர் 2025) இரவு 12.30 மணியளவில் பிரான்சின் Fontenay-sous-Bois (Val-de-Marne) நகரில் கொடூரமான படுகொலை சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. இந்த தாக்குதலில் 40 வயதுடைய ஆண் ஒருவர் சம்பவ இடத்திலேயே மரணித்துள்ளார். இது பிரான்ஸ் (France) இல் கத்திக்குத்து (couteau attaques) தாக்குதல்களின் அதிகரிப்பை (hausse des violences) பிரதிபலிக்கிறது.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, சம்பவ தினத்தன்று நள்ளிரவு 12:30 மணி அளவில் Allée du Buisson-de-la-Bergère (அல்லீ டு புய்சோன் டி லா பெர்ஜெர்) பகுதி அருகே, rue Jean-Zay (ரியூ ஜான்-ஜே) மற்றும் avenue Charles-Garcia (அவென்யூ சார்ல்ஸ்-கார்ஸியா) இடுக்கில் மரணித்த 40 வயது ஆண் நின்றிருந்தார்.
அந்த நேரம் கத்தியுடன் அங்கு வந்த இரண்டு இளைஞர்கள்(deux agresseurs) அவரை சரமாரியாகத் தாக்கியுள்ளனர். உடலின் பல இடங்களில் ஆழமான காயங்கள் ஏற்படும் வரை தாக்குதலைத் தொடர்ந்துள்ளனர், இவ்வாறு அவரது கழுத்துப் பகுதியில் ஏற்பட்ட ஆழமான காயம் சம்பவ இடத்திலேயே அவரது உயிரைப் பறித்தது.
அங்கு இடம்பெற்ற அனைத்து சம்பவத்தையும் நேரில் கண்ட ஒரு சாட்சி (témoin) அவற்றை வீடியோவாக (vidéo filmée) பதிவு செய்துள்ளார், இந்த வீடியோ ஆதாரம் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்க(enquête) உதவும் என SDPJ 94 (Service Départemental de Police Judiciaire du Val-de-Marne) போலீஸ் தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
அடுத்தகட்ட விசாரணைகளில் இருந்து கொலை செய்யப்பட்டவர் அந்த பகுதியில்தான் வசிக்கிறார் என்பது தெரியவந்துள்ளது. சம்பவ இடத்தில் இருந்து தப்பிச் சென்ற கொலையாளிகளில் ஒருவர், கொலை செய்யப்பட்டவரின் சிறை(Jail) நண்பர்(ancien codétenu) என்பதும் தெரிய வந்துள்ளது.
குறித்த நபர் இன்றைய தினம் திங்கட் கிழமை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக காவலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இவரது நண்பரான தப்பியோடிய மற்றுமொரு கொலையாளி தேடப்பட்டு வருகிறார். கொலை நடந்த இடத்தில் அதிக இரத்தம் (plein de sang) இருந்தமை உள்ளூர் மக்களை அச்சமடைய செய்துள்ளது.
இந்த ஈவிரக்கமற்ற படுகொலை (meurtre sauvage) குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு மேலதிக விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளது. கத்திக்குத்துக்கான காரணங்கள் (motifs de l'attaque) இன்னும் தெரியவில்லை, ஆனால் இது பிரான்ஸ் நாட்டில் அதிகரிக்கும் கத்தி வன்முறை (augmentation des attaques au couteau) போக்கை (tendance) சுட்டிக்காட்டுகிறது.
இந்த சம்பவம் Val-de-Marne (வால்-டி-மார்ன்) பகுதியில் பாதுகாப்பு (sécurité publique) குறித்த கேள்விகளை (inquiétudes des riverains) அதிகரித்துள்ளது, 2025இன் முதல் அரை ஆண்டில் 16% அதிகரித்துள்ளது. இவ்வாறான வன்முறையை (violence extrême) எதிர்த்து பாதுகாப்பு நடவடிக்கைகளை (mesures de sécurité) முன்னெடுக்குமாறு உள்ளூர் மக்கள் (riverains de Fontenay-sous-Bois) கோருகின்றனர்.
Comments
Post a Comment