பிரபல கையடக்க தொலைபேசி நிறுவனமான ஆப்பிள்(Apple Inc.) தனது மூன்றாம் தலைமுறை ஏர்பொட்ஸ் ப்ரோ (AirPods Pro 3) கருவியை உலகளவில் அறிமுகப்படுத்தியுள்ளது, இது வாடிக்கையாளர்களுக்கு உயர்தர ஓடியோ அனுபவத்தை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஆனால் இதில் புதிதாக இணைக்கப்பட்டுள்ள அம்சம் காரணமாக பிரான்ஸ் உட்பட்ட ஓரோப்பிய நாடுகளில் இந்த கருவியை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவது பெரும் சவாலாக உள்ளது.
இந்த ஏர் பாட்ஸ் (AirPods) தொடரில் புதிய அம்சமாக "லைவ் ட்ரான்ஸ்லேஷன்" (Live Translation) அல்லது பிரெஞ்ச் மொழியில் "ட்ரடுக்ஷியோன் என் டைரெக்" (Traduction en direct) என்று பெயரிடப்பட்டுள்ள உடனடியாக மொழிபெயர்ப்பு செய்யக்கூடிய வசதி இணைக்கப்பட்டுள்ளது.
இதனூடாக பாவனையாளர்கள் தங்கள் ஐபோன் (iPhone) அல்லது பிற ஆப்பிள் சாதனங்களுடன் (Apple Devices) உரையாடும்போது, பிரெஞ்ச் மொழி (French Language) உரையாடலை ஆங்கிலம் (English) அல்லது பிற மொழிகளுக்கு உடனடியாக மாற்றி பயன்படுத்திக்கொள்ள முடியும்.
செப்டம்பர் 19, 2025 முதல் விற்பனைக்கு வரவுள்ள இந்த கருவியை பிரான்ஸ் வாழ் மக்கள் முன்பதிவுகளை செய்து கொள்வனவு செய்யலாம் ஆனால், பிரான்ஸ் (France) உட்பட ஐரோப்பிய யூனியன் (European Union - EU) நாடுகளில் உள்ள பாவனையாளர்களுக்கு மட்டும் இந்த புதிய மொழிபெயர்ப்பு சிறப்பம்சம் 2025 ஆம் ஆண்டில் பயன்படுத்த கூடியதாக இருக்காது என நிறுவனம் அறிவித்துள்ளது.
ஏர் பொட்ஸ் ப்ரோ 3 (AirPods Pro 3) இன் புதிய அம்சங்கள் மற்றும் விலை (Price) விபரங்கள்
ஆப்பிள் (Apple) நிறுவனம் 2025 செப்டம்பர் 9 அன்று நடந்த சிறப்பு நிகழ்ச்சியில் (Apple Event 2025) ஏர் பொட்ஸ் ப்ரோ 3 (AirPods Pro 3) ஐ அறிமுகப்படுத்தியது. இந்த வயர்லெஸ் ஈயர்பட்ஸ் (Wireless Earbuds) ஐ 249 யூரோக்களுக்கு(249 Euros) கோவணவு செய்யலாம்.
ஆனால் பிரெஞ்சு மற்றும் ஐரோப்பிய மக்களுக்கும் இதன் சிறப்பம்சமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மொழிபெயர்ப்பு அம்சம் (Translation Feature) பயன்படுத்த முடியாமல் இருக்கும். இந்த அம்சம் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence - AI) மூலம் செயல்படுகிறது, இது ஆங்கிலம் (UK, US), பிரெஞ்ச் (France), ஜெர்மன் (German), போர்த்துகீஸ்(Portuguese - Brazil) மற்றும் ஸ்பானிஷ் (Spanish - Spain) ஆகிய மொழிகளில் கிடைக்கக் கூடியதாக உள்ளது.
மேலும் இதில், உலகின் சிறந்த ஒலி ரத்து செய்யும் திறன் (World's Best Active Noise Cancellation - ANC), இதய துடிப்பு அளவீடு (Heart Rate Sensing) போன்ற உடலாரோக்கியம் தொடர்பிலான அம்சங்களும் (Health Features) இணைக்கப்பட்டுள்ளன.
இந்த லைவ் ட்ரான்ஸ்லேஷன் (Live Translation) அம்சம் ஏர் பொட்ஸ் ப்ரோ 3 (AirPods Pro 3) ஐப் போன்று இரண்டாம் தலைமுறை ஏர் பொட்ஸ் ப்ரோ (AirPods Pro 2) மற்றும் ANC உள்ள ஏர் பொட்ஸ் 4 (AirPods 4 with ANC) ஆகியவற்றிலும் கிடைக்கின்றமை மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும். துரதிஷ்டவசமாக இவற்றில் யாவுமே பிரான்ஸ் (France) போன்ற ஐரோப்பிய நாடுகளில் (EU Countries) EU ஆப்பிள் கணக்குகளுக்கு (EU Apple Accounts) தடை செய்யப்பட்டுள்ளது.
பிரான்ஸ் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு தடை விதிக்க காரணம்
ஐரோப்பிய யூனியன் (European Union - EU) இன் கடுமையான தரவு பாதுகாப்பு விதிமுறைகள் (Data Protection Regulations - GDPR) ஆகும். இவை லைவ் ட்ரான்ஸ்லேஷன் (Live Translation) அம்சம் உரையாடல்களை (Conversations) பதிவு செய்து (Record) AI மூலம் செயலாக்கும் (Process) இற்கு எதிராக இருக்கும் ஒரு விதிமுறையாகும்.
இதன் தனிப்பட்ட தரவுகளை (Personal Data) பாதுகாக்கும் GDPR விதிகளுக்கு (General Data Protection Regulation - GDPR) பொருந்தாது அப்பிளின் புதிய சிறப்பம்சம் பொருந்தாது என ஆப்பிள் (Apple) தெரிவித்துள்ளது. மேலும் பிரான்ஸ் (France) உள்ளிட்ட ஐரோப்பியர்கள் (European Users) இந்த அம்சத்தை பெற குறைந்தது சில மாதங்கள் அல்லது ஆண்டுகள் தாமதம் ஏற்படலாம். இது லட்சக்கணக்கான EU பயனர்களை (EU Users) பாதிக்கும், குறிப்பாக சர்வதேச பயணிகள் (International Travelers) மற்றும் வணிகர்(Business Professionals)களையும் வெகுவாக பாதிக்கும்.
ஆப்பிள் (Apple) நிறுவனம் இந்த விஷயத்தில் EU அதிகாரிகளுடன் (EU Authorities) பேச்சுவார்த்தை நடத்தி, GDPR இணக்கம் (GDPR Compliance) அடைந்தவுடன் புதிய அம்சத்தை விரிவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், பிரான்ச் (France) மற்றும் ஐரோப்பா (Europe) பயனர்கள் தற்போது ஏர் பொட்ஸ் ப்ரோ 3 (AirPods Pro 3) ஐ வாங்கினாலும், அதன் முழு அம்சங்களை (Full Features) அனுபவிக்க முடியாது.
இருப்பினும் பிரான்சில் ஏர் பொட்ஸ் ப்ரோ 3 (AirPods Pro 3) பிரியர்கள், ஆவலாக வாங்குவதற்கு எதிர்பார்த்திருந்தீர்களானால் US அல்லது பிற நாட்டு ஆப்பிள் கணக்குகளை (Non-EU Apple Accounts) பயன்படுத்தி அம்சத்தை அணுக முயற்சி செய்யலாம், ஆனால் இது GDPR விதிகளுக்கு (GDPR Rules) எதிராக இருக்கலாம். 2026 இல் மேம்படுத்தப்பட்ட வடிவம் (Improved Version) வெளியாகலாம் என தகவல்கள் கசிந்துள்ளன. எது எப்படியோ ஏர் பொட்ஸ்(AirPods) தொடரின் இந்த புதிய மொடல் உலகளவில் பிரபலமாகும் என்பதில் ஐயமில்லை, ஆனால் ஐரோப்பியர்கள் (Europeans) சற்று காத்திருக்க வேண்டியிருக்கும்.
Comments
Post a Comment