ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் என்றாலே அனைவருக்கும் கொண்டாட்டம் தான் ஏனென்றால் மார்கழி மாதத்தில் கிடைக்கும் நீண்ட விடுமுறையில் ஒவ்வொருவரும் தம் வசதிக்கேற்ப சிலர் உள் நாட்டிலேயே ஊர் சுற்றி பார்க்கவும், சிலர் நாடு விட்டு நாடு சென்று உலகம் சுற்றி பார்க்கவும் திட்டமிடுவர்.
அந்த வகையில் 2025 ஆம் ஆண்டுக்கான கிறிஸ்மஸ் விடுமுறை (Christmas Holiday) மற்றும் புத்தாண்டு (New Year) விடுமுறையை முன்னிட்டு பயணங்களை திட்டமிடும் பயணிகளுக்கான ரயில் பயண டிக்கெட்டுகள் அல்லது பயணச்சிட்டைகள் (Travel Tickets) விற்பனை இன்றைய தினம் திங்கட்கிழமை 15 செப்டம்பர் 2025 முதல்ஆரம்பமாகியுள்ளது.
டிக்கெட்டுகள் அல்லது பயணச்சிட்டைகள் (Travel Tickets) ஒக்டோபர் 1, 2025-க்கு பின்னர் பயணங்களைத் (Post-October Travel) திட்டமிட்டிருக்கும் பயணிகளுக்கானது. இன்று திங்கட்கிழமை முதல் உங்களது பயணச்சிட்டைகளை முன்பதிவு செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி பயண ஆர்வலர்களுக்கு (Travel Enthusiasts) மகிழ்ச்சியானதொரு தகவலாகும்.
Trenitalia மற்றும் Eurostar: சர்வதேச பயணச்சேவைகள் (International Travel Services)
இத்தாலியின் முன்னணி ரயில் நிறுவனமான ட்ரெனிடாலியா (Trenitalia) மற்றும் யூரோஸ்டார் (Eurostar) ஆகியவை இன்று முதல் தங்களது பயணச்சிட்டைகளை (Train Tickets) விற்பனை செய்யத் தொடங்கியுள்ளன. செப்டம்பர் 17, 2025 புதன்கிழமை முதல் TGV சேவைகளுக்கான (TGV Train Services) பயணச்சிட்டைகளும் கிடைக்கக் கூடியதாக இருக்கும்.
ட்ரெனிடாலியா (Trenitalia) சேவைகள்
பரிஸ் (Paris), லியோன் (Lyon), மார்செய் (Marseille), மற்றும் மிலான் (Milan) ஆகிய நகரங்களுக்கு இடையிலான அதிவேக ரயில் சேவைகளை (High-Speed Train Services) வழங்கும் ட்ரெனிடாலியா (Trenitalia) நிறுவனத்தின் பயணச்சிட்டைகளையும் உங்கள் தேவைக்கேற்ப முன்பதிவு செய்து கொள்ளலாம்.
இந்த சேவைகளுக்கான பயணச்சிட்டைகள் டிசம்பர் 14, 2025 முதல் மார்ச் 15, 2026 வரையான காலப்பகுதிக்குள் (Winter Travel 2025-2026) பயணம் செய்ய திட்டமிட்டிருப்பவர்களுக்கு பொருத்தமானவை. வசதியான பயண அனுபவத்தைப் (Comfortable Travel Experience) பெற்றுக்கொள்ள ஆர்வமாக இருக்கும் பயணிகள் இன்றே முன்பதிவு செய்யலாம்.
யூரோஸ்டார் (Eurostar) சேவைகள்
யூரோஸ்டார் (Eurostar) நிறுவனம் லண்டன் (London), ஆம்ஸ்டர்டாம் (Amsterdam), மற்றும் பிரஸ்ஸல்ஸ் (Brussels) ஆகிய நகரங்களுக்கு இடையிலான பயணச்சிட்டைகளை (Cross-Border Train Tickets) விற்பனை செய்கிறது. இந்த சேவைகள் டிசம்பர் 14, 2025 முதல் பெப்ரவரி 8, 2026 வரையான காலப்பகுதிக்குள் (Christmas Travel Period) பயணம் செய்யவிருப்பவர்களுக்கு ஏற்றது.
இந்த சேவைகள் ஐரோப்பாவின் முக்கிய நகரங்களை (Major European Cities) இணைப்பதால், அனைத்து பயணிகளும் விரும்பக்கூடிய தெரிவாகும். உங்கள் ஆசனங்களை உறுதி படுத்திக்க கொள்ள இன்றே முன்பதிவு செய்து கொள்ளலாம்.
TGV சேவைகள் (TGV Train Services)
பயணிகளுக்கு வேகமான மற்றும் நம்பகமான பயண வசதிகளை (Fast and Reliable Travel) வழங்கும் பிரான்ஸின் அதிவேக ரயில் சேவையான TGV (TGV) செப்டம்பர் 17, 2025 முதல் பயணச்சிட்டைகளை விற்பனை செய்யத் தொடங்கவுள்ளது. TGV மூலம் பரிஸ் (Paris) மற்றும் பிற முக்கிய நகரங்களுக்கு (Major Cities) பயணிக்க விரும்புவோர் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஏன் முன்பதிவு செய்ய வேண்டும்? (Why Book Early?)
கிறிஸ்துமஸ் போன்ற ஐரோப்பாவின் பிரபலமான பண்டிகை காலங்களில் (Christmas Holiday Season) புது வருட (New Year)கொண்டாட்டத்தையும் கருதி நீண்ட விடுமுறை பயணங்களை அநேகமான மக்கள் திட்டமிடுவர், எனில் பயணசீட்டுகளுக்கான கேள்வி அதிகமாக இருக்கும் சில நேரங்களில் விடுமுறை நெருங்கும் போது டிக்கெட்டுகள் கிடைக்காமல் கூட போகலாம்.
ஆகவே விடுமுறை காலங்களில் உங்களுக்கு விரும்பிய ஆசனங்களை(Preferred Seats) சிறந்த விலைகளில் (Best Prices) பெற்றுக்கொள்ள முன்பதிவு(Early Booking) அவசியம், மேலும் ஐரோப்பாவின் பிரபலமான இடங்களை (Popular European Destinations) பார்வையிடுவதற்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாகும்.
பயணிகளுக்கான ஆலோசனைகள் (Travel Tips)
முன்பதிவு செய்யுங்கள் (Book Early): கிறிஸ்மஸ் விடுமுறை காலத்தில் (Christmas Season) சிறந்த சலுகைகளை (Best Deals) பெற முன்கூட்டியே முன்பதிவு செய்யவும்.
பயணத் திட்டமிடல் (Travel Planning): உங்கள் பயண இலக்குகளை (Travel Destinations) முன்கூட்டியே தீர்மானித்து, பயணச்சிட்டைகளை (Train Tickets) உறுதி செய்யவும்.
சலுகைகளைப் பயன்படுத்தவும் (Use Offers): ட்ரெனிடாலியா (Trenitalia), யூரோஸ்டார் (Eurostar), மற்றும் TGV ஆகியவை அவ்வப்போது வழங்கும் தள்ளுபடிகளை (Travel Discounts) பயன்படுத்திக் கொள்ளவும்.
Comments
Post a Comment