செப்டம்பர் 19 ,2025 அன்று சீன்-எட்-மார்ன் (Seine-et-Marne) மாவட்டத்தில், சூப்பெஸ்-சர்-லோயிங் (Souppes-sur-Loing) நகரில் நிகழ்ந்த கொலை முயற்சி சம்பவத்தில் ஒருவர் பலியாகியுள்ளார். தனது சொந்த குடும்பத்தினரையே கொலை செய்ய துணிந்த நபர் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
சூப்பெஸ்-சர்-லோயிங் (Souppes-sur-Loing) நகரின் அமைதியான குடியிருப்புப் பகுதியொன்றில், சம்பவ தினத்தன்று இரவு 7 மணியளவில், சம்பவம் நிகழ்ந்த வீட்டிற்குள் இருந்து "நான் உன்னை கொன்றுவிடுவேன்!" போன்ற மிரட்டும் பாணியிலான வார்த்தைகள் அக்கம் பக்கத்துக்கு வீடுகளில் இருந்தவர்களுக்கு கேட்டுள்ளது.
இதனையடுத்து ஊர் மக்கள் போலீசாரிடம் முறைப்பாடு செய்துள்ளனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் குறித்த வீட்டிற்குள் செல்ல முற்பட்ட போது நடுத்தர வயது ஆண் ஒருவர் வீட்டை விட்டு வெளியில் வர மறுத்ததோடு காவல்துறையினரையும் தாக்க முற்பட்டுள்ளார்.
குறித்த நபர் 58 வயதுடைய முன்னாள் இராணுவ வீரர் எனவும் அவர் தனது சொந்த குடும்ப உறுப்பினர்களுக்கே இவ்வாறு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர முதலில் காவல்துறையினர் பிஸ்டால் ஆ இம்புல்ஷன் எலெக்த்ரிக் (Pistolet à impulsion électrique - Taser) ஆயுதத்தை மூன்று முறை பயன்படுத்தி அவரை அச்சுறுத்த முயன்றனர். இருப்பினும் அந்த முயற்சி பலனளிக்கவில்லை, மாறாக குறித்த நபர் ஹச்சோயர் (Hachoir) ஆயுதத்தால் பொலிஸாரைத் தாக்க முயன்றார்.
இதனால், வேறு வழியின்றி ஒரு பொலிஸ் அதிகாரி சர்வீஸ் ஆயுதத்தை (Arme de service) பயன்படுத்தி துப்பாக்கி சூடு நடத்தினார், இதில் குறித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த மீட்பு நடவடிக்கையில் நேர்ந்த உயிரிழப்பு தொடர்பில் குற்றவாளியை சுட்ட பொலிஸார் தீவிர மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து ஃபோன்டெய்ன்ப்ளோவைச் (Fontainebleau) சேர்ந்த பார்கே (Procureur) அர்னோ ஃபோகெர் (Arnaud Faugère) தலைமையில் இரண்டு விதமான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
ஒன்று: சம்பவம் தொடர்பில் காவல்துறையின் நடவடிக்கையின் (Intervention policière) சட்டபூர்வத்தன்மையை ஆராய்வது;
இரண்டு: சம்பவத்தில் துப்பாக்கி சூட்டின் அவசியத்தையும் அதன் பின்னணியையும் ஐஜிபிஎன் (Inspection générale de la Police nationale - IGPN) என்ற சிறப்பு காவல் அமைப்பு (Police des polices) மூலம் விசாரிப்பது.
உயிரிழந்தவரின் குடும்ப உறுப்பினர்கள் மீட்கப்பட்டு மருத்துவ உதவிகளுக்காக வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் "சம்பவ இடத்தில் நிலவிய சூழ்நிலை மிகவும் ஆபத்தாக இருந்தது, காவல்துறையினரின் உயிருக்கே அச்சுறுத்தல் இருந்தது "என்று பார்கே அறிக்கை (Communiqué du parquet) தெரிவிக்கிறது.
இந்தச் சம்பவம் லா பாரிஸியன் (Le Parisien), 20 மினிட்ஸ் (20 Minutes), ஓஸ்ட் ஃப்ரான்ஸ் (Ouest-France) போன்ற பிரான்ஸ் ஊடகங்களில் (Médias français) கடுமையான விவாதத்தைத் தூண்டியுள்ளது.
சமூக ஆர்வலர்கள், காவல்துறை வன்முறை (Violence policière) மற்றும் மனநலப் பிரச்சினைகள் (Santé mentale) குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் சூப்பெஸ்-சர்-லோயிங் (Souppes-sur-Loing) போன்ற சிறிய நகரங்களில் (Petites communes) பொது பாதுகாப்பு (Sécurité publique) பற்றிய விவாதங்கள் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
பிரான்ஸ் சட்டங்களின்படி (Lois françaises), இந்தச் சம்பவம் காவல்துறையினரின் சுயபாதுகாப்பு (Légitime défense) என்ற கோணத்தில் விசாரிக்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு, லா ரெப்யுப்ளிக் டி சீன்-எட்-மார்ன் (La République de Seine-et-Marne) போன்ற உள்ளூர் ஊடகங்களை (Médias locaux) பார்வையிடவும்.
Comments
Post a Comment