பரிஸ் (Paris), செப்டம்பர் 22, 2025
உலகப் புகழ் பெற்ற சுற்றுலாத் தளமான பாரிஸ்(Paris) நகரின் லியோன் (Gare de Lyon) ரயில் நிலையத்துக்கு அருகில் உள்ள 12வது வட்டாரத்தில் (12th Arrondissement) உள்ள பிரபலமான மதுபான விடுதி ஒன்றில் 19 வயது யுவதிக்கு பாலியல் ரீதியில் அநீதி இழைக்கப்பட்டுள்ளமை பாரிஸ் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
பாரிஸ் நகரின் 12ஆம் வட்டாரத்தில் அமைந்துள்ள மிகப்பிரபலான ரூஃப்டாப் மதுபான விடுதி (Rooftop Bar)-யின் அடித்தளத்தில் (Basement) இந்த பயங்கர சம்பவம் நிகந்துள்ளது. சம்பவ தினமான
20 செப்டம்பர் 2025 சனிக்கிழமையன்று அதிகாலை நான்கு மணியளவில் சம்பவம் இடம்பெற்ற குறித்த விடுதியில் இருந்து காவல்துறையினருக்கு பாலியல் அத்துமீறல் தொடர்பில் புகாரளிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் குறித்த பெண்ணை மீட்டு பாதுகாப்பளித்தனர். அதனைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் இருந்து பாதிக்கப்பட்ட பெண் மதுபான விடுதி ஊழியர் (Bar Employee) ஒருவரால் ஏமாற்றப்பட்டு அடித்தளத்தில் (Basement)இற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார் எனவும் பின்னர் பாலியல் வல்லுறவுக்கு (Rape) உட்படுத்தப்பட்டுள்ளார் எனவும் தெரியவந்துள்ளது.
அடுத்த கட்ட நடவடிக்கையாக சம்பவம் தொடர்பில் சந்தேகிக்கப்படும் முக்கியமான நபர் அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டார். தொடர்ந்து மற்றுமொரு சந்தேக நபரும் கைது செய்யப்பட்டார். பரிஸ் புராசிக்யூட்டர் அலுவலகம் (Paris Prosecutor's Office), வியோல் (Viol) என்ற குற்றச்சாட்டின் கீழ் வழக்கு பதிவு செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது. சம்பவம் தொடர்பிலான பின்னணியை 2வது ஜூடிஷியல் காவல்துறை மாவட்டம் (2nd District of Judicial Police - DPJ) ஆராய்ந்து வருகிறது.
Comments
Post a Comment