Skip to main content

பாரிஸ் சம்பவங்கள் தீவிரம்: பிரான்ஸ் பொருளாதாரத்துக்கு புதிய சவால்

 



பிரான்ஸ் பாரிஸ் (Paris) நகரில் உள்ள உலகப் புகழ்பெற்ற (Paris) ஃபிள் கோபுரம் (Eiffel Tower) அருகே செப்டம்பர் 13 2025 சனிக்கிழமையன்று Pont de l'Alma மேம்பாலத்தில் (Pont de l'Alma Bridge) அதிர்ச்சி தரும் கத்திக்குத்து தாக்குதல் (Knife Attack) சம்பவம் ஒன்று தாக்குதல் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. 

இந்நிகழ்வானது பாரிஸ் நகரின் பாதுகாப்பு  (Paris Security)  குறித்தும், பாரிஸில் அமைந்துள்ள பிரபலமான சுற்றுலாத் தளங்களின் (Tourist Attractions) பாதுகாப்பு குறித்தும் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. 

செப்டம்பர் 13, 2025 சனிக்கிழமை இரவு நிகந்த இந்த பயங்கரமான தாக்குதல் (Violent Attack) இரண்டு தனி நபர்களுக்கிடையில் நடந்த மோதலாகும். இதில் ஒருவர் மற்றொரு நபரை பலமுறை கத்தியால் குத்தியதாக (Stabbing Incident) காவல்துறை (Paris Police) தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதன்போது பலத்த காயங்களுக்குட்பட்ட குறித்த நபர்(Victim) உயிருக்கு ஆபத்தான நிலையில் பாரிஸில் உள்ள மருத்துவமனையில் (Paris Hospital) அவசர சிகிச்சைப் பிரிவில் (Emergency Care) அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 

குறித்த நபரை தாங்கியவர் (Attacker) சம்பவ இடத்திலிருந்து தப்பிச்ச சென்றுள்ள நிலையில் பாரிஸ் காவல்துறையினர் (Paris Police Department) அவரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்தச் சம்பவம் பாரிஸ் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏழாம் வட்டாரத்திலுள்ள காவல்துறை (7th Arrondissement Police) இந்த வழக்கு தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில். Pont de l'Alma பாலம் (Pont de l'Alma Bridge) மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுக் காட்சிகள் (CCTV Footage), சாட்சிகளின் (Witnesses)வாக்குமூலங்கள் போன்ற ஆதாரங்களைத் திரட்டி வருகிறார்கள்.

மேலும் கிடைக்கப்பெற்ற ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு தாக்குதல்தாரியை விரைவில் அடையாளம் காண்பதற்கான முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன. பாரிஸ் மாநகராட்சி (Paris Municipality) மற்றும் பிரான்ஸ் உள்நாட்டு அமைச்சு (French Interior Ministry) இந்த விவகாரத்தில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன.

ஈஃபிள் கோபுரம் (Eiffel Tower) உலகின் மிக முக்கியமான சுற்றுலாத் தலங்களில் (Tourist Destinations) ஒன்றாகும். ஆண்டுதோறும் மில்லியன் கணக்கான சுற்றுலாப் பயணிகள் (Tourists) இந்த இடத்தைப் பார்வையிட வருகின்றனர். இத்தகைய தாக்குதல் சம்பவங்கள் பாரிஸ் சுற்றுலாத் துறை (Paris Tourism) மற்றும் பிரான்ஸ் பயணத் துறையில் (France Travel) பெரிய தாக்கத்தை ஏற்படுத்தலாம். 

பாரிஸ் நகரின் பாதுகாப்பு நடவடிக்கைகள் (Security Measures) மற்றும் குற்றத் தடுப்பு முயற்சிகள் (Crime Prevention) எதிர்காலங்களில் இது போன்ற சம்பவங்களை கருத்திற் கொண்டு செயற்பட வேண்டும். 

மேலும் பரிசுக்கு சுற்றுலா பயணங்களை மேற்கொள்ள திட்டமிடுபவர்கள் இவ்வாறான பகுதிகளில் மிகுந்த அவதானமாக இருக்க வேண்டும், பாரிஸ் சுற்றுலாத் துறை (Paris Tourism Industry) இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க மேலதிக  பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய  நிலை உருவாகியுள்ளது. 







Comments

Popular posts from this blog

பிரான்ஸ்: கோர விபத்தில் சிக்கிய பாடசாலை பேருந்து! 17 பேர் படுகாயம்!!

  தெற்கு பிரான்சின் லோட் (Lot) மாவட்டத்தில் உள்ள கஹோர்ஸ் (Cahors) நகரில், நிகழ்ந்த பயங்கர விபத்து ஒன்றில் 17 பாடசாலை மாணவர்கள்  படுகாயமடைந்துள்ளனர். இன்று திங்கட்கிழமை செப்டம்பர் 15 2025  காலை 07.20 மணியளவில் பாடசாலை மாணவர்களை ஏற்றி சென்ற பாடசாலை பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகி உள்ளது.  விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது, செமின் டெஸ் டுராண்ட்ஸ் (Chemin des Durands) பகுதியில், லெஸ் ஜூனீஸ் (Les Junies) என்ற ஊரிலிருந்து கஹோர்ஸ் (Cahors) நகர மையத்திற்கு சென்று கொண்டிருந்த எவிடென்ஸ் (Évidence) நிறுவனத்தின் 16 எண் பேருந்து (Bus line 16) திடீரென கட்டுப்பாட்டை இழந்து வழி மாறி மரம்(Arbre) ஒன்றில் மோதியது.  வேகக் கட்டுப்பாட்டை இழந்து அதி உயர் வேகத்தில் மரத்தில் மோதியதால் பேருந்து திரும்பி விழுந்துள்ளது. அதில்  38 மாணவர்கள் (Collégiens et Lycéens), ஆசிரியர் ஒருவர், மற்றும் பேருந்து சாரதி ஒருவர் என மொத்தமாக 40 பேர் பயணித்தனர். அவர்களில் 17 பேருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது.  இது குறித்து விபத்து நிகழ்ந்த பிராந்தியத்தின் ஆளுநர் கிளேரா ரௌலின் (Claire Raul...

பிரான்ஸ்: ஈரோ மில்லியன் விளையாட்டு! மீண்டும் ஒரு மில்லியன் ஈரோ வென்ற நபர்!!

  ஐரோப்பிய யூனியன் (European Union) நாடுகளான பிரான்ஸ் (France), ஸ்பெயின் (Spain), போர்த்துக்கல்(Portugal) மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளில் விளையாடப்படும் சர்வதேச சீட்டிழுப்பு (International Lottery) விளையாட்டின், கடந்தவார சீட்டிழுப்பில் பிரான்ஸ் குடியுரிமை கொண்ட  நபர் ஒருவர் ஒரு மில்லியன் யூரோ (Million Euros) பரிசினை வென்றுள்ளார்.  இதில் சிறப்பான விடயம் என்னவென்றால் இதே நபர் ஏற்கனவே கடந்த 2023 ஆம் ஆண்டு நடந்த யூரோமில்லியன் (EuroMillions) விளையாட்டிலும் ஒரு மில்லியன் யூரோ (Million Euros) பரிசினை வென்றிருந்தார். இவ்வாறு இரண்டு ஆண்டுகளுக்குள் இரண்டு முறை பரிசை வென்றுள்ளமை அனைவரையும் ஆச்சரியத்திற்குட்படுத்தியுள்ளது.  பிரான்ஸின் அதிகாரப்பூர்வ சீட்டிழுப்பு நிறுவனமான ஃப்ரான்செஸ் டெஸ் ஜியூ (Française des Jeux - FDJ) இவரது இந்த வெற்றியை உறுதிப்படுத்தியுள்ள நிலையில் லொட்டரி உலகிலும் இந்நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  இந்த பரிசுத்தொகையானது யூரோமில்லியன் (EuroMillions) இன், மை மில்லியன் (My Million) என்ற சிறப்பு பிரெஞ்ச் டிரா (French Draw) மூலம் கிடைத்து...

பாரிஸ்: பிரபல விடுதியில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்! சுற்றுலா பயணிகள் எச்சரிக்கை!

  பரிஸ் (Paris), செப்டம்பர் 22, 2025  உலகப் புகழ் பெற்ற சுற்றுலாத் தளமான பாரிஸ்(Paris) நகரின் லியோன் (Gare de Lyon) ரயில் நிலையத்துக்கு அருகில் உள்ள 12வது வட்டாரத்தில் (12th Arrondissement) உள்ள பிரபலமான மதுபான விடுதி ஒன்றில் 19 வயது யுவதிக்கு பாலியல் ரீதியில் அநீதி இழைக்கப்பட்டுள்ளமை பாரிஸ் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,  பாரிஸ் நகரின் 12ஆம் வட்டாரத்தில் அமைந்துள்ள மிகப்பிரபலான ரூஃப்டாப் மதுபான விடுதி (Rooftop Bar)-யின் அடித்தளத்தில் (Basement) இந்த பயங்கர சம்பவம் நிகந்துள்ளது. சம்பவ தினமான  20 செப்டம்பர் 2025 சனிக்கிழமையன்று அதிகாலை நான்கு மணியளவில் சம்பவம் இடம்பெற்ற குறித்த விடுதியில் இருந்து காவல்துறையினருக்கு பாலியல் அத்துமீறல் தொடர்பில் புகாரளிக்கப்பட்டது.  சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் குறித்த பெண்ணை மீட்டு பாதுகாப்பளித்தனர். அதனைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் இருந்து பாதிக்கப்பட்ட பெண் மதுபான விடுதி ஊழியர் (Bar Employee) ஒருவரால் ஏமாற்றப்பட்டு அடித்தளத்தில் (Basement)இ...