செப்டம்பர் 22, 2025 இன்று முதல் பிரான்சில் இலையுதிர்காலம் (L’automne) காலம் ஆரம்பமாகிறது என பிரான்ஸ் வானிலை ஆய்வு மையம் (Météo France) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி உள்ளூர் நேரப்படி மாலை 8:19 மணிக்கு (19:19 UTC) சூரியனின் சமநிலை நிகழ்வு (Équinoxe d’automne) நிகழ்கிறது. இது வடக்கு பந்தையில் (Hémisphère Nord) இலையுதிர்காலத்தின் (Automne) முறையான ஆரம்பத்தைக் குறிக்கிறது.
இந்த பருவத்தில் வெப்பநிலை மெது மெதுவாகக் குறைந்து அடுத்து வரும் வாரங்களில் மழை நாட்கள் (Jours de pluie) அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. இலையுதிர் காலத்தின் ஆரம்ப நாட்களான இந்த வாரத்தில் பிரான்ஸின் வடக்கு பகுதிகளில் (Nord de la France) அடர்த்தியான மழை (Précipitations intenses) பதிவாகும் என பிரான்ஸ் வானிலை மையம் (Météo France) எச்சரிக்கை விடுத்துள்ளது.
செப்டம்பர் 20 ஆம் திகதி வரை வெப்பமான காற்று (Air estival) நிலவியது என்றாலும், செப்டம்பர் 21 முதல் குளிர்ந்த காற்று (Air frais) பரவத் தொடங்கியுள்ளது. இதனால் வெப்பநிலை 2-3°C குறைவாக (Températures inférieures aux normales) காணப்படுகிறது. இருப்பினும் பகல் நேரங்களில் தேவையான அளவு சூரிய ஒளி (Ensoleillement suffisant) கிடைக்கும், மேலும் நண்பகல் முதல் 20 முதல் 90 மி.மீ வரை மழை (Pluie de 20 à 90 mm) பெய்ய வாய்ப்புள்ளது.
செப்டம்பர் மாதம் முழுவதும், பிரான்ஸில் (France) சராசரி வெப்பநிலை 13°C முதல் 22°C வரை இருக்கும், மேலும் 3 முதல் 8 நாட்கள் மழை (Jours de pluie) எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காலநிலை மாற்றத்தால் விவசாயிகள் (Agriculteurs français) விளைநிலங்களில் பயிர் பாதுகாப்பு (Protection des cultures) தொடர்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டி வரலாம்.
ஆனால் சுற்றுலாப் பயணிகளுக்கு(Touristes en France) பிரான்சில் இலையுதிர் காலம் என்பது அற்புதமான அனுபவமாக இருக்கும். இலையுதிர் காலத்தில் பழமை வாய்ந்த கட்டிடங்களுக்கு நடுவே சாரல் மழையில், உதிர்ந்த இலைகளின்((Feuilles d’automne) அழகை காண்பது மறக்க முடியாத நினைவாக இருக்கும்.
Comments
Post a Comment