பிரான்ஸ், பாரிஸ் நகரின் ஆறாம் வட்டார (6th Arrondissement) பகுதியில் நாம் நினைத்து பார்த்திடாததொரு விசித்திர விபத்து (Accident) நேர்ந்துள்ளது. 15 செப்டம்பர் 2025 திங்கட்கிழமை அன்று நடந்த இந்த வினோத சம்பவம் இப்படியெல்லாம் விபத்து நடக்குமா...? என அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இளைஞர் ஒருவர் நடைபாதையில் (Sidewalk) நடந்து சென்றுகொண்டிருந்த வேளை அந்த நடைபாதைக்கு மிக அருகிலிருந்த கட்டடம் ஒன்றின் பால்கனியில் (Balcony) தொங்கவிடப்பட்டிருந்த பழமையான அலங்கார விளக்கு (Antique Lamp) திடீரென அவ்விடத்தை கடக்க முற்பட்ட மேற்குறித்த இளைஞரின் தலையில் விழுந்துள்ளது. இந்த எதிர்பாராத விபத்து பாரிசில் பொது பாதுகாப்பு (Public Safety) மற்றும் பராமரிப்பு குறித்து கேள்வி எழுப்பியுள்ளது.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது.
பாரிஸின் அதிக பரபரப்பான நடைபாதைகளில் ஒன்றான ஆறாவது வட்டாரத்தில் அமைந்துள்ள இந்த நடைபாதையில் சம்பவ தினத்தன்று விபத்துக்குள்ளான இளைஞர் நடந்து வந்து கொண்டிருந்தார், உலகின் பழம்பெரும் நகரங்களில் ஒன்றான பாரிஸில் பழமையை நிலைநாட்டும் அலங்கார வேலைப்பாடுகள் இன்றளவும் பேணிப் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் நடை பாதையையொட்டி அமைந்திருந்த ஒரு பழமையான கட்டிடத்தில் தொங்க விடப்பட்டிருந்த பழமையான அலங்கார விளக்கு அறுந்து குறித்த இளைஞரின் தலையில் விழுந்ததால் அவருக்கு கடுமையான காயம் ஏற்பட்டது. உடனே குறித்த பகுதியில் வீதியில், கடைகளில் இருந்த பொது மக்கள் அவ்விடத்திற்கு விரைந்து இளைஞருக்கு உதவியுள்ளனர்.
அளவுக்கதிகமான குருதி பெருக்கெடுத்த நிலையில் அவசர உதவிக்கு
ழு, மற்றும் அவசர மருத்துவ சேவைக்கு தகவல் வழங்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக் குழுவினர் இளைஞரை மீட்டு அருகில் உள்ள வைத்திய சாலைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
குறித்த இளைஞருக்கு உயிராபத்தோ அல்லது பலத்த காயங்களோ இல்லை என சிகிச்சையளித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர், இருப்பினும் இவ்விபத்து மக்களிடையே பாரிஸின் பழமை பெருமையா? அல்லது ஆபத்தா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
“பொது சொத்துக்களையும் (Public Property) தனியார் சொத்துக்களையும் (Private Property) சரியான முறையில் பராமரிப்பது (Maintenance) மிகவும் முக்கியம். இதுபோன்ற விபத்துகள் (Accidents) தவிர்க்கப்பட வேண்டும்,” என அப்பகுதி மேயர் (Mayor) அதிருப்தி (Displeasure) வெளியிட்டுள்ளார்.
மேலும், பரிஸ் (Paris) நகராட்சி (Municipality) இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க, கட்டிட பராமரிப்பு (Building Maintenance) மற்றும் பொது பாதுகாப்பு (Public Safety) விதிமுறைகளை கடுமையாக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து ஆறாவது வட்டாரத்தின் (6th Arrondissement) மேயர் (Mayor), குறித்த பகுதியில் உள்ள அனைத்து பொது இடங்களிலும் (Public Places), தனியார் கட்டிடங்களிலும் (Private Buildings) உள்ள அலங்கார பொருட்கள் (Decorative Items) மற்றும் விளக்குகளின் (Lamps) பாதுகாப்பு (Safety) குறித்து ஆய்வுகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.
மேலும், பரிஸ் (Paris) நகரில் உள்ள பழமையான கட்டிடங்களில் (Historic Buildings) பயன்படுத்தப்படும் அலங்கார விளக்குகளின் (Decorative Lamps) பராமரிப்பு (Maintenance) மற்றும் பாதுகாப்பு (Safety) நிலையை உறுதி செய்ய, ஒரு சிறப்பு குழுவும் (Special Committee) அமைக்கப்படவுள்ளது.
Comments
Post a Comment