பிரான்ஸில் அரசின் 2026 ஆம் ஆண்டிற்கான நிதித் திட்டங்களை எதிர்த்து நாட்டிலுள்ள CFDT, CGT, FO, CFE-CGC, CFTC, UNSA, FSU, Solidaires ஆகிய முக்கியமான எட்டு சங்கங்கள் ஒன்றிணைந்து வேலை நிறுத்த போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன. அந்தவகையில் நாளை 18 செப்டம்பர் 2025 வியாழக்கிழமை 'கருப்பு நாள்' (Journée Noire) என்ற பெயரில் ஆர்ப்பாட்டம் இடம்பெறவுள்ளது.
ஏற்கனவே செப்டம்பர் 10, 2025 அன்று 'பிளாக் எவ்ரிசிங்' (Bloquons Tout) என்ற பெயரில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் 197,000 முதல் 250,000 பேர் வரை கலந்துகொண்டிருந்த நிலையில் நாளை இடம்பெறவிருக்கும் ஆர்ப்பாட்டத்தில் சுமார் 800,000 பேர் வரை கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், பாரிஸ் மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் உள்ள கடைகளின் உரிமையாளர்களுக்கு பொலிஸ் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காவல்துறையினரால் கடை உரிமையாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட மின்னஞ்சலில் வன்முறை குழுவின் தாக்குதலுக்கு இலக்காகாமல் இருக்க போராட்டம் நடைபெறவுள்ள வழியில் உள்ள அனைத்து கடைகளையும் மூடுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும் 'பிளாக் பிளாக்' (Black Blocs) போன்ற ராடிக்கல் குழுக்கள் (Groupuscules Radicaux) இவ்வாறான போராட்ட களங்களில் வன்முறை (Exactions) செயற்பாடுகளில் ஈடுபட வாய்ப்புகள் அதிகம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் 10 அன்று நிகழ்ந்த ஆர்ப்பாட்ட வேளையில் சேட்லெட் லெஸ் ஹால் (Châtelet-Les Halles) பகுதியில் உள்ள உணவகம் ஒன்று தீக்கிரையாக்கப்பட்டதை சுட்டிக்காட்டி நாளை இதுபோல அசம்பாவிதம் நிகழாமல் அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
இது குறித்து பிரான்ஸ் வணிக சபைகள் அமைப்பின்Conseil du Commerce de France) தலைவர் க்யூ கிராஸ் (Guy Gras) தெரிவிக்கையில். நாளைய போராட்டம் செப்டம்பர் 10 அன்று நடந்ததை விட அதிக தாக்கத்தை ஏற்படுத்தும். என்று கூறினார். ஆகையால் கடை உரிமையாளர்கள் முன்கூட்டியே கடைகளை மூடி தங்கள் பாதுகாப்பை உறுதி செய்யுமாறும் கேட்டுக் கொண்டார்.
போக்குவரத்து சேவைகள் மீது போராட்டத்தின் தாக்கம்
SNCF மற்றும் RATP போக்குவரத்து (Transports SNCF et RATP):
RATP சங்கங்கள் (Syndicats RATP) 90 வீதமான சாரதிகள் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டத்தில் பங்கெடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்துள்ளது.
இந்நிலையில் SNCF மற்றும் RATP மெட்ரோ (Métro), RER, பேருந்துகள் (Bus) மற்றும் பரந்த் (Transilien) சேவைகள் பெரும்பாலும் முடக்கப்படும், TGV மற்றும் Intercités ரயில் சேவைகள் கடுமையாக பாத்திப்பிற்குள்ளாகும்.
விமான நிலையங்கள் (Aéroports):
உள்நாட்டு விமான சேவைகள் தாமதமாகலாம் (Vols Intérieurs), அல்லது முற்றாக இரத்து (Retards et Annulations) செய்யப்படலாம். SNCTA சங்கம் (Syndicat SNCTA) தாம் வேலை நிறுத்தத்தை ஒத்திவைத்துள்ளதாக அறிவித்துள்ளது.
கல்வி மற்றும் சுகாதாரம் (Éducation et Santé):
பாடசாலை(Écoles)களை பொறுத்தமட்டில் 45 வீதமான ஆசிரியர்கள் (Enseignants) வேலை நிறுத்தத்தில் பங்கேற்பதனால் பல பிராந்தியங்களில் பாடசாலைகள் மூடப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. மற்றும் 98 வீதமான மருந்தகங்கள் மூடப்படும் சாத்தியங்கள் இருப்பதால் மருத்துவமனை சேவைகள் பெரிதளவில் பாதிக்கப்படும்.
பிற சேவைகள்: மேட்குறிப்பிட்டவை தவிர பொது மக்களால் அன்றாடம் நுகரப்படும் அரசு அலுவலகங்கள் (Services Publics), அஞ்சல் (La Poste) மற்றும் வங்கிகள் (Banques) போன்ற சேவைகளும் கணிசமான அளவில் பாதிப்பப்படும்.
பாரிஸில் 50,000 முதல் 100,000 ஆர்ப்பாட்டக்காரர்கள் (Manifestants à Paris) எதிர்பார்க்கப்படுகின்றனர். ஆர்ப்பாட்டப் பாதை பாஸ்டில் (Place de la Bastille) இலிருந்து ரிபப்ப்ளிக் (Place de la République) வழியாக நேஷன் (Place de la Nation) வரை நீளும். அசம்பாவிதங்களை தவிர்க்க 80,000 காவல்துறை வீரர்கள் களத்தில் செயற்படுவார்.
புதிய பிரதமர் Sébastien Lecornu தனது பதவிக்காலத்தின் முதல் சவாலை நாளைய தினம் எதிர்கொள்கிறார். ஆனால் இந்த ஆர்ப்பாட்டம் முன்னாள் பிரதமர் பிரான்சுவா பைரூ (François Bayrou) அரசின் 44 பில்லியன் யூரோ (44 Milliards d'Euros) சேமிப்புத் திட்டத்திற்கு (Plan d'Économies) எதிராக முன்னெடுக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தி பிரான்ஸ் ஊடகங்களின் (Médias Français) அறிக்கைகளை (Rapports) அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது மேலதிக தகவல்களுக்கு France 24, Le Monde போன்ற இணையதளங்களை பார்க்கவும்.
Comments
Post a Comment