பிரான்ஸில் அரசினால் மக்கள் நலன் கருதி பல உதவித் திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இருப்பினும் மக்களில் பலருக்கு Caisse d’Allocations Familiales - CAF வழங்கும் உதவிகள் பற்றிய போதுமான விழிப்புணர்வு இல்லாததால், அவர்களுக்கு கிடைக்கக் கூடிய நியாயமான நிதி உதவிகளை (allocations) தவறவிடுகின்றனர்.
வீட்டு வசதி உதவிகள் (Aides au logement), மாணவர் விடுதி உதவி (Logement étudiant), இடமாற்ற உதவி (Prime de déménagement), இல்ல புனரமைப்புக் கடன் (Prêt à l'amélioration de l’habitat) போன்றவை CAF இன் முக்கிய திட்டங்களாகும். ஆனால், இவற்றில் சில உதவிகள் பயன்படுத்தப்படாமல் உள்ளன, இதனால் பலர் பயனடையாமல் போகின்றனர்.
2025 இல் CAF உதவிகளின் மக்கள் நுகர்ச்சி புள்ளிவிவரங்கள்
2025 ஆம் ஆண்டில், (Mes-Allocs.fr) இன் ஆய்வின்படி, (Revenu de Solidarité Active - RSA), வீட்டு வசதி உதவிகள் (Aides Personnalisées au Logement - APL), மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி (Allocation aux Adultes Handicapés - AAH) ஆகியவற்றை மக்கள் பயன்படுத்தும் விகிதம் அதிகரித்துள்ளது.
ஆனால், (Prime d’activité) மற்றும் (Allocation de Soutien Familial - ASF) போன்ற நிதி உதவிகள் இன்னும் குறைந்தளவிலேயே பயன்படுத்தப்படுகின்றன. இதனால், ஒவ்வொரு ஆண்டும் சுமார் 10 பில்லியன் யூரோக்கள் (euros) மதிப்புள்ள நிதி உதவிகள் (aides sociales) பயன்படுத்தப்படாமல் உள்ளதாக (Direction de la recherche, des études, de l’évaluation et des statistiques - Drees) தெரிவிக்கிறது.
பிரைம் டி’ஆக்டிவிடி (Prime d’activité)
(Prime d’activité) என்பது 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, ஊதியம் பெறும் தொழிலாளர்கள் (salariés), சுயதொழில் செய்பவர்கள் (indépendants), அல்லது பகுதி நேர வேலையின்மை உதவி (chômage partiel) பெறுபவர்களுக்கு வழங்கப்படும் ஒரு பிரதான சலுகையாகும்.
குறைந்தளவிலான வருமானம் (revenus) பெறுபவர்கள் இந்த சலுகையைப் பயன்படுத்துவதன் மூலம் தங்களது தொழில் வருமானத்தை (revenus professionnels) உயர்த்திக் கொள்ளலாம். இதனைப் பயன்படுத்துவதன் மூலம், ஒரு நபர் தனது மாதாந்திர வருமானத்தை கணிசமானளவு அதிகரிக்கலாம்.
வயதானவர்களுக்கான RSO: மாதம் 600 யூரோக்களுக்கு மேல் கிடைக்கும்
Prime d’activité ஐப் போல, மக்களால் அறியப்படாத மற்றொரு சலுகை Revenu de Solidarité - RSO ஆகும். இது 55 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, குறிப்பாக பிரான்ஸின் கடல்கடந்த பிராந்தியங்களில் (départements et régions d’outre-mer) மற்றும் கடல்கடந்த பிரதேசங்களில் (territoires ultramarins) வசிப்பவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் வழங்கப்பட்ட தொகை கடந்த ஓகஸ்ட் மாதம் Journal officiel இல் வெளியிடப்பட்ட ஒரு ஆணையின் மூலம் உயர்த்தப்பட்டது. முந்தைய மாதம் 598.73 யூரோக்களாக (euros) இருந்த இந்த உதவி, தற்போது 608.91 யூரோக்களாக (euros) உயர்ந்துள்ளது.
இந்த உதவிகளை எவ்வாறு பெறுவது?
CAF இன் உதவிகளைப் பெறுவதற்கு, (CAF) இணையதளத்தில் பதிவு செய்து, சலுகைகளை பெற்றுக் கொள்வதற்கான உங்கள் தகுதியை (éligibilité) சரிபார்க்க வேண்டும்.
உங்கள் வருமான விவரங்கள் (revenus), குடும்ப நிலை (situation familiale), மற்றும் வசிக்கும் இடம் (lieu de résidence) ஆகியவற்றை வழங்க வேண்டும். Mes-Allocs.fr போன்ற தளங்கள், உங்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய உதவிகளை எளிதாகக் கண்டறிய உதவும். மேலும், (CAF) அலுவலகங்களில் நேரடியாகவோ அல்லது ஒன்லைனிலோ (en ligne) விண்ணப்பிக்கலாம்.
ஏன் இந்த சலுகைகள் மக்களால் பயன்படுத்தப்படவில்லை?
பல பிரெஞ்சு மக்களிடையே இந்த சலுகைகள் பற்றிய சரியான விழிப்புணர்வு இல்லாமை அல்லது விண்ணப்ப செயல்முறை procédure de demande கடுமையானதாக இருப்பதாக மக்கள் நினைத்தல் போன்றவை முக்கிய காரணங்களாகும்.
ஆனால், CAF மற்றும் Mes-Allocs.fr போன்ற அமைப்புகள் இந்த செயல்முறையை எளிதாக்குவதற்கு உதவுகின்றன. உங்களுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய உதவிகளைப் பெறுவதற்கு, உங்கள் தகுதியை இப்போதே சரிபார்க்கவும் (vérifier votre éligibilité).
Caisse d’Allocations Familiales - CAF வழங்கும் உதவிகள், பல பிரெஞ்சு மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த உதவுகிறது. ஆனால், (Prime d’activité), (RSO), (APL) போன்ற உதவிகள் மக்களால் பயன்படுத்தப்படாமல், ஆண்டுதோறும் பில்லியன் கணக்கான யூரோக்கள் (euros) பயன்படுத்தப்படாமல் உள்ளன.
இந்த உதவிகளைப் பற்றி அறிந்து, உங்கள் தகுதியைச் சரிபார்த்து, உங்களுக்கு உரிமையான நிதி உதவியைப் (soutien financier) பெறுங்கள். இப்போதே (CAF) இணையதளத்தைப் பார்வையிடவும்!
Comments
Post a Comment