விடியலின் பெருவெடிப்பில் நீங்கள் பிறந்தீர்கள். ஒரு புதிய பிரபஞ்சமாக, எல்லையற்ற சாத்தியங்களின் ஆற்றலுடன், நிகழ்கணத்தின் புத்துணர்ச்சியுடன். அந்த நாள் முழுவதும், உங்கள் பிரபஞ்சம் விரிவடைந்தது. நீங்கள் செயல்கள் செய்தீர்கள் , அனுபவங்கள் பெற்றீர்கள், உறவாடினீர்கள், உணர்ச்சிகளின் வண்ணங்களை உணர்ந்தீர்கள். உங்கள் ஆற்றல் வெளிப்பட்டது, பரவியது, உலகத்துடன் கலந்தது. அது ஒரு கொண்டாட்டம், ஒரு நடனம், ஒரு படைப்பு.
ஆனால்,
பிரபஞ்சத்தின் அடிப்படை நியதி சமநிலை. ஒவ்வொரு விரிவாக்கத்திற்கும் ஒரு சுருக்கம் உண்டு.
ஒவ்வொரு வெளிப்பாட்டிற்கும் ஒரு உள்வாங்குதல் உண்டு.
ஒவ்வொரு பிறப்பிற்கும் ஒரு இறப்பு உண்டு.
ஓயாமல் சுழலும் சக்கரத்திற்கு ஆதாரமாக இருப்பது அசையாத அச்சு. வெளிச்சத்திற்கு ஆதாரமாக இருப்பது இருள். இயக்கத்திற்கு ஆதாரமாக இருப்பது அசைவின்மை. இதுவே பிரபஞ்சத்தின் பெருநடனம். இதுவே புலியின் பாதையின் இதயத்துடிப்பு.
இரு துடிப்புகளின் இடையிலும் ஒரு துடிப்பற்ற தன்மை
உண்டு.
பகல்
மெல்லச் சாய்கிறது. பாருங்கள், அடிவானத்தில் சூரியன் தன் பொன்னிறக் கதிர்களைச்
சுருக்கிக்கொண்டு, இரவின் மடிக்குள் சரணடைகிறது. வெளிச்சம் குறைகிறது, நிழல்கள் நீண்டு, வடிவங்கள் கரைகின்றன. பகலின் இடைவிடாத ஆரவாரங்கள், சத்தங்கள், இயக்கங்கள் மெல்ல மெல்ல அடங்குகின்றன. காற்றில் ஒருவிதமான அமைதி, ஒருவிதமான கனத்தன்மை படர்கிறது.
இது சோகமான முடிவல்ல. இது பயப்பட வேண்டிய இருளல்ல. இது இயற்கையான மாற்றம். இது, நாள் முழுவதும் விரிவடைந்த உங்கள் பிரபஞ்சம், சிதறிய உங்கள் ஆற்றல், கட்டமைக்கப்பட்ட உங்கள் 'நான்' - அனைத்தும் மீண்டும் தன் மூலத்தை நோக்கித் திரும்பும் நேரம். தன் கருவறைக்குத் திரும்பும் நேரம். இதுதான் மாலையின் பெரும் ஓடுங்கல் (Dusk's Big Crunch). விடியலின் பெருவெடிப்பின் எதிர்நிலை, ஆனால் அதன் நிறைவு.
இரவு
- அனைத்தையும் தன்னுள் இழுத்துக் கொள்ளும் எல்லையற்ற வெற்றிடம், கருணையின் கருவறை
இரவு
என்பது வெறுமனே வெளிச்சமின்மை அல்ல. அது ஒரு செயலற்ற
இருள் அல்ல. அது ஒரு சக்திவாய்ந்த,
உயிர்ப்புள்ள வெளி. அனைத்தையும் தன்னுள் இழுத்துக்கொள்ளும் ஒரு மாபெரும், எல்லையற்ற
வெற்றிடம். பகலில் உருவான அத்தனை வடிவங்களையும், அத்தனை இயக்கங்களையும், அத்தனை வண்ணங்களையும், அத்தனை அடையாளங்களையும் அது மெல்ல மெல்ல,
ஆனால் உறுதியாகக் கரைக்கிறது.
பிரபஞ்சத்தின்
பெருங்குடுக்கம்(Big
Crunch) எப்படி
கோடிக்கணக்கான ஆண்டுகளாக விரிவடைந்த அண்டத்தின் அத்தனை நட்சத்திரங்களையும், கோள்களையும், காலத்தையும், வெளியையும் மீண்டும் ஒரு ஒற்றைப் புள்ளிக்கு,
அந்த மூல நிலைக்கு இழுக்குமோ,
அதுபோல இரவு, அந்த நாளில் உருவான
உங்கள் நான் என்பதையும், அதன் அத்தனை அனுபவங்களையும்,
அதன் அத்தனை பற்றுகளையும், அதன் அத்தனை நினைவுகளையும்
தன்னுள் மென்மையாக இழுத்து, அந்த மூல நிலைக்கு
- அந்தத் தூய, குணங்களற்ற, அசைவற்ற
நிலைக்கு - கொண்டு செல்கிறது.
இது
அச்சுறுத்தலானதல்ல. இது ஒரு தண்டனையல்ல.
இது ஒரு ஆழமான அரவணைப்பு.
ஒரு தாய், நாள் முழுவதும் விளையாடிக்
களைத்துப்போன தன் குழந்தையைத் தன்
மார்போடு அணைத்து, தன்னுள் இழுத்துக்கொள்வது போல, இரவு உங்களை
அதன் எல்லையற்ற, நிசப்தமான அமைதிக்குள், அதன் கருணை நிறைந்த
கருவறைக்குள் இழுத்துக்கொள்கிறது. இது, நீங்கள் மீண்டும்
நனவுடன், முழு மனதுடன், ~இன்றிரவு
நீ இறப்பாய் என்ற அந்தப் புனிதப்
பயிற்சியைச் செய்வதற்கான அழைப்பு. இது, மூலத்திற்குத் திரும்புவதற்கான
அழைப்பு.
பெரும்
ஒடுங்கலின் செயல்பாடு
என்பது கரைத்தல், ஒன்றிணைத்தல், மூலத்திற்குத் திருப்புதல். மாலையில், இரவு நெருங்கும்போது, நீங்கள்
வெறுமனே உறங்கச் செல்லக்கூடாது. நீங்கள் நனவுடன், விழிப்புணர்வுடன் இந்தப் பிரபஞ்சப் பெரும் ஒடுங்கலில் பங்கேற்க
வேண்டும். இது ஒரு தியானம்.
இது ஒரு புனிதச் சடங்கு.
பொருட்கள்
மீதான பற்றெனும் சங்கிலியை அறுத்தெறிதல்: இன்று நீங்கள் பயன்படுத்திய, சம்பாதித்த, இழந்த, விரும்பிய பொருட்கள் - அவை எதுவும் உங்களுடையவை
அல்ல. அவை காலத்தின் ஓட்டத்தில்
கைமாறும் கருவிகள். அவை தற்காலிகமானவை. அவற்றின்
மீதான உங்கள் பிடியை, உங்கள் பற்றுதல் என்ற சங்கிலியை, இரவின்
அமைதியான கத்தியால் அறுத்துவிடுங்கள். நீங்கள் வெறுங்கையோடு வந்தீர்கள், வெறுங்கையோடுதான் அந்த மூலத்திற்குத் திரும்ப
வேண்டும்.
உறவுகளின்
பிணைப்பை அன்புடன் தளர்த்துதல்: இன்று நீங்கள் சந்தித்த மனிதர்கள், அவர்களுடனான உங்கள் உறவுகள், அதனால் ஏற்பட்ட உணர்ச்சிகள் (அன்பு, கோபம், ஏமாற்றம், பாசம், வெறுப்பு)-அவை அந்த நாளின்
ஆற்றல் பரிமாற்றங்கள். அவற்றை இறுக்கமாகப் பிடித்துக்கொள்ளாதீர்கள். அந்தப் பிணைப்புகளை இரவின் மென்மையான கரங்களால் அன்புடன் தளர்த்துங்கள். உறவுகளை அல்ல, உறவுகளின் மீதான உங்கள் பற்றை, உங்கள் எதிர்பார்ப்புகளை விடுவியுங்கள். அடுத்த நாள் அவை புதியதாக,
எந்தச் சுமையுமின்றி மலரட்டும்.
அகங்காரமெனும்
கோட்டையைத் தகர்த்தெறிதல்: மிக மிக முக்கியமாக,
பகல் முழுவதும் நீங்கள் சிறிது சிறிதாகக் கட்டமைத்த, மெருகேற்றிய, பாதுகாத்த அந்த ~நான்| என்ற அகங்காரக் கோட்டையை
- உங்கள் பதவி, உங்கள் அறிவு, உங்கள் திறமைகள், உங்கள் கருத்துக்கள், உங்கள் பெருமைகள், உங்கள் சிறுமைகள், உங்கள் அடையாளங்கள் - அனைத்தையும் முழுமையாகக் கரைத்துவிடுங்கள். ~நான்| என்ற உணர்வு, அந்தத்
தனித்தன்மை என்ற எண்ணம், இரவின்
எல்லையற்ற வெற்றிடத்தில் ஒரு பனிக்கட்டியைப் போல
உருகி, மறைந்து போகட்டும்.
இது
ஒரு செயல்முறை. அவசரப்படாமல், ஒவ்வொரு பொருளாக, ஒவ்வொரு உறவாக, ஒவ்வொரு எண்ணமாக, ஒவ்வொரு உணர்வாக, ஒவ்வொரு 'நான்' என்ற அடுக்காக நனவுடன்
அணுகி, "இது நான் அல்ல,
இது என்னுடையதல்ல, இதுவும் கரைந்து போகிறது, இது மூலத்தில் இணைகிறது"
என்று உணர்வுப்பூர்வமாக விடுவியுங்கள். இது ஒரு தியாகம்
அல்ல, இது ஒரு விடுதலை.
இந்தப்
பற்றுகளையும், இந்த அகங்காரத்தையும் நீங்கள்
விடுவிக்க விடுவிக்க, கரைக்கக் கரைக்க, என்ன மிஞ்சுகிறது? எது
எஞ்சியிருக்கிறது?
நிசப்தம்.
காதுகளால் கேட்கும் வெளிப்புற சத்தங்கள் மட்டுமல்ல, மனதின் இடைவிடாத பேச்சும், எண்ணங்களின் ஓட்டமும், உணர்ச்சிகளின் கொந்தளிப்பும் அடங்கிய ஒரு ஆழமான, துளைக்க
முடியாத நிசப்தம். மனம் ஒரு சலனமற்ற,
தெளிந்த நீரோடை போல மாறுகிறது. அதன்
ஆழம் தெரிகிறது.
அசைவின்மை. உடலின் அசைவுகள் மட்டுமல்ல, மனதின் அலைபாய்தலும், பிரபஞ்சத்தின் இயக்கமும் நின்ற ஒரு நிலை. இது
சோர்வோ, மரணமோ, செயலற்ற தன்மையோ அல்ல. இது ஆற்றலின் உறைந்த
நிலை. இது எல்லையற்ற சாத்தியங்களின்
பிறப்பிடம். இது விழிப்புணர்வுள்ள, உயிர்ப்புள்ள ஓர்
அசைவின்மை. இதுவே பிரபஞ்சத்தின் அடிப்படை நிலையான, எல்லாம் தோன்றும் அந்த மூலம் - அச்சு.
இந்தப்
பெரும் ஒடுங்கலின் முடிவில்,
இந்தப் புனிதமான ஒவ்வொரு இரவும் திரும்ப வேண்டிய உங்கள் உண்மையான வீடு. இந்த நிலையில், நீங்கள்
காலம், வெளி, உடல், மனம் ஆகியவற்றின் அத்தனை
வரையறைகளையும் கரைந்து போதலின் இறுதியில் நீங்கள் அடைவது இந்த நிசப்தமும், இந்த
அசைவின்மையும்தான். இதுவே உங்கள் உண்மையான இயல்பு. இதுவே நீங்கள், எல்லைகளையும் கடந்த ஒரு தூய உணர்வாக
(Pரசந ஊழளெஉழைரளநௌள), ஒரு எல்லையற்ற இருப்பாக
இருக்கிறீர்கள்.
நேற்றைய
சுமை இல்லை, நாளைய பயம் இல்லை. நான் என்ற சுயம் இல்லை, அதனால் அதன் போராட்டங்களும் இல்லை.
இருப்பது எல்லையற்ற அமைதி, எல்லையற்ற வெறுமை (ஆனால் அது நிறைவான வெறுமை),
எல்லையற்ற சாத்தியம். இதுவே உண்மையான, ஆழமான ஓய்வு. இதுவே அடுத்த ~விடியலின் பெருவெடிப்பிற்கான சக்தி சேகரிப்பு, கருவறைத் தயாரிப்பு.
இந்தப்பெரும்
ஓடுங்கல், அந்தப் பெருவெடிப்பைப் போலவே முக்கியமானது. இரண்டும் ஒன்றையொன்று சார்ந்துள்ளன. ஒன்றில்லாமல் மற்றொன்று இல்லை. இரவின் கரைதலில் தான் விடியலின் பிறப்பு
அடங்கியிருக்கிறது. தினசரி மரணத்தில்தான் தினசரி வாழ்க்கை அடங்கியிருக்கிறது. அசைவற்ற அச்சில்தான் சுழலும் சக்கரத்தின் ஆற்றல் அடங்கியிருக்கிறது.
இப்போது,
இந்த தினசரி சுழற்சியை நாம் இன்னும் ஆழப்படுத்த
முடியுமா? ஒவ்வொரு நாளும் மட்டுமல்ல, ஒவ்வொரு கணமும் இந்த இறப்பு-பிறப்பு
நடனத்தை நிகழ்த்த முடியுமா? பகலின் உச்சகட்ட இயக்கத்திலும் இந்த அசைவின்மையைத் தக்கவைத்துக்
கொள்ள முடியுமா?
அடுத்த
அத்தியாயத்தில், இந்த தினசரி இறப்பு
- பிறப்பு சுழற்சியை எப்படி ஒவ்வொரு கணத்திற்கும் தீவிரப்படுத்துவது, எப்படி ஒவ்வொரு கணத்தையும் ஒரு முழுமையான பிரபஞ்சமாக
வாழ்வது - நிமிட வாழ்க்கை வாழ்வது எப்படி என்பதை ஆராய்வோம்.
Comments
Post a Comment