22 செப்டம்பர் 2025 அன்று அதிகாலை 5 மணியளவில் தலைநகர் பாரிஸில் புலம்பெயர்ந்து பிரான்சில் வாழும் நபர் ஒருவர் துணிச்சலாக RATP நிறுவனத்தின் இரவு நேர சேவையில் இருந்த பேருந்து ஒன்றை திருட முற்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
RATP நிறுவனத்தின் நேர அட்டவணைக்கு அமைவாக அதிகாலை 5 மணிக்கு இரவு நேர சாரதிகளுக்கான ஒய்வு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் இரவு நேர சேவையில் ஈடுபடும் N13 இலக்க பேருந்தின் சாரதி, மாண்ட்பார்னாஸ் தொடருந்து நிலையத்தில் (Terminus Gare Montparnasse) அதிகாலை 5 மணிக்கு பேருந்தை நிறுத்திவிட்டு வெளியில் சென்றிருந்தார்.
அந்த சமயத்தில், அங்கு தங்கியிருந்த புலம்பெயர்ந்து வந்து வீதிகளில் வசிப்பவர்களில்(Homme SDF Paris) ஒருவர் பேருந்தில் ஏறி, சாரதி இருக்கையில் (Siège de Conducteur Bus) அமர்ந்து, பேருந்தை இயக்கத் தொடங்கியுள்ளார்.
இதில் ஆச்சரியம் என்னவென்றால் குறித்த நபர் பேருந்தை மிகவும் இயல்பாகவும், நிதானமாகவும் செலுத்தினார். பாரிஸின் இரவு நேர போக்குவரத்தில் (Circulation Nocturne Paris) சிவப்பு விளக்கு சமிக்ஞைகளை (Feux de Circulation) மதித்து, வேகக் கட்டுப்பாடுகளை (Limite de Vitesse) பின்பற்றி, மெதுவாக செலுத்தினார். "அவர் வாகனம் செலுத்துவதில் தடுமாற்றம் ஏதும் இன்றி செயற்பட்டார் " என பிரான்ஸ் காவல்துறை (Police Nationale Française) தெரிவித்தது.
மறுபுறம் குறித்த பேருந்தின் சாரதி இடைவேளையை முடித்துக்கொண்டு திரும்பிய போது, தான் நிறுத்தி வைத்திருந்த பேருந்து காணாமல் போனதைக் கண்டு அதிர்ந்து RATP கட்டுப்பாட்டு மையத்துக்கு (Centre de Contrôle RATP) அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது, பேருந்தில் பொருத்தப்பட்டிருந்த GPS அமைப்பு (Système de Géolocalisation RATP) மூலம் அதன் இருப்பிடத்தைக் கண்டறிந்த காவல்துறையினர் பேருந்தைப் பின்தொடர்ந்தனர் (Poursuite Policière Bus).
GPS மூலம் காட்டப்பட்ட போர்ட் மாயோ (Porte Maillot) பகுதிக்கு விரைந்த போலீசார் தொடர்ந்து சுமார் 20 நிமிடங்கள் வரை பேருந்தை பின்தொடர்ந்து பெரிபெரிக் வழிச்சாலை (Boulevard Périphérique) வழியாக 20ஆம் வட்டாரத்தில் (20e arrondissement) உள்ள போர்ட் டி பான்யோலெ (Porte de Bagnolet) பகுதியில் வைத்து அதிகாலை 5:30 மணியளவில் பேருந்தை தடுத்து நிறுத்தினார்கள்.
நல்ல வேளை பேருந்தில் பயணிகள் யாரும் இல்லாததால், உயிரிழப்போ அல்லது பிற பிரச்சனைகளோ ஏற்படவில்லை. ஆனால் பிரான்ஸின் தலைநகரில் பொது இடத்தில் நிகழ்ந்த இந்த துணிச்சலான திருட்டு முயற்சி மீண்டும் இவாறான குற்றச் செயல்களுக்கு வழிவகுக்கலாம் என அச்சம் எழுந்துள்ளது.
கைதான நபர் இதற்கு முன்னர் எந்தவிதமான குற்ற செயல்களிலும் ஈடுபடாதவர் என பாரிஸ் காவல்துறை (Police Paris) மற்றும் நீதித்துறை (Justice Française) தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் அவர் தங்குமிட வசதியில்லாமல் வீதியில் வசிப்பதனால் மட்டும் அகதி என்று தீர்க்கமாக முடிவு செய்திட முடியாது. வேறு அடையாளத்தில் குற்ற செயல்களில் ஈடுபட்டுள்ளாரா? அல்லது உண்மையில் அகதிதானா? என்பது தொடர்பில் ஆராயப்படவுள்ளது.
குறித்த நபருக்கு எதிராக பிரான்ஸ் குற்றவியல் சட்டத்தின் (Code Pénal Français) கீழ் வாகன திருட்டு (Vol de Véhicule) மற்றும் போக்குவரத்து விதி மீறல் (Infraction au Code de la Route) போன்ற குற்றச்சாட்டுகளின் பெயரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை இலான்சிலி போக்குவரத்து வலையமைப்பு பிரிகேட் (Brigade des Réseaux Franciliens) பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.
இந்த சம்பவத்தை தொடர்பில் RATP நிறுவனம் (Régie Autonome des Transports Parisiens) பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. "பயணிகள் எவரும் (Passager Bus) பாதிக்கப்படவில்லை, என்றாலும் இது பொது போக்குவரத்து பாதுகாப்பை (Sécurité Transports Publics) மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை வெளிப்படுத்துகிறது," என்று RATP செய்தித் தொடர்பாளர் கூறினார்.
மேலும் RATP ஏற்கனவே GPS தொழில்நுட்பம் (GPS RATP) மற்றும் CCTV கண்காணிப்பு கேமராக்களை (Caméras de Surveillance Bus) பயன்படுத்தி வரும் நிலையில், எதிர்காலத்தில் சாரதிகளின் ஓய்வு நேரங்களில் (Pause Conducteur RATP) மேலதிக கண்காணிப்பு (Surveillance Renforcée) நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் கூறினார்.
இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க, பிரான்ஸ் போக்குவரத்து அமைச்சகம் (Ministère des Transports Français) GPS மற்றும் AI தொழில்நுட்பங்களை (Technologie GPS AI Transports) மேலும் விரிவாக்க திட்டமிட்டுள்ளது. 2025ஆம் ஆண்டில், பிரான்ஸ் போக்குவரத்து வலையமைப்பில் (Réseau Transports Île-de-France) திருட்டு மற்றும் வன்முறை சம்பவங்கள் 9% உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment