பிரான்ஸின் சைன் எட் மார்ன் (Seine-et-Marne) மாவட்டத்தில் பாரியளவிலான கொள்ளை சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதில் பிரபல தொலைபேசி நிறுவனமான ஒரஞ்ச் (Orange) நிறுவனத்தின் பல்லாயிரம் யூரோ மதிப்பிலான சொத்துக்கள் களவாடப்பட்டுள்ளன. குறித்த சம்பவத்தோடு தொடர்புடைய 65347 யூரோ பெறுமதியிலான 7.3 டன் வெண்கல கேபிள்கள் (câbles en bronze) மீட்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கடந்த மார்ச் 29, 2025 அன்று அதிகாலை 01:25 மணியளவில் அச்சேர்ஸ்-லா-ஃபோரெட் (Achères-la-Forêt) என்ற அமைதியான கிராமத்தில் அமைக்கப்பட்டிருந்த ஒரஞ்ச் (Orange) நிறுவனத்தின் தொலைபேசி இணைப்பு (téléphone câbles) அமைப்புகளின் ஒரு டிராப் (trappe) அலாரம் தீடிரென ஒலித்தது.
இதனையடுத்து குறித்த பகுதியை நோக்கி விரைந்த நெமூர்ஸ் (Nemours) PSIG (Peloton de Surveillance et d'Intervention de la Gendarmerie) காவலர்கள், அங்கு முகமூடி அணிந்திருந்த மூன்று கொள்ளையர்கள் அங்கிருந்த வெண்கல கேபிள்களை வெட்டி எடுத்து கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சிக்குள்ளாகினர்.
காவல்துறையினர் அவர்களை தடுக்க முற்பட்டபோதும் கொள்ளையர்கள் துரிதமாக செயற்பட்டு காலல்துறை வாகனத்தில் இருந்த தீயணைப்பு கருவிகள் மூலம் காவல்துறையினரை தாக்கி, கொள்ளையடித்த பொருட்களோடு அவ்விடத்திலிருந்து மாயமாகினர், இந்த தாக்குதலில் காவல்துறையினர் படுகாயமடைந்தனர்.
பின்னர், சம்பவம் தொடர்பிலான தீவிர விசாரணைகள் ஃபான்டெய்ன்பிலோ (Fontainebleau) காவல் நிலையத்தின் பிரிகேட் டி ரெச்செர்செஸ் (brigade de recherches) துறையினரால் முன்னெடுக்கப்பட்டது.
விசாரணைகளின் மூலம் கொள்ளை கும்பலின் நிசான் பிக்அப் (Nissan pick-up) வாகனப் பதிவெண்ணை அடிப்படையாகக் கொண்டு, உரிமையாளரின் காப்பீட்டு (assurance) விபரங்கள் மூலம் ஜினோ (Gino) என்ற 27 வயது இளைஞரின் தொலைபேசி என் கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கடந்த ஓகஸ்ட் 5, 2025 அன்று குறித்தி Gino என்ற நபர், அவர் வசித்து வந்த கான்ஸ்-ஏக்லூஸ் (Cannes-Écluse) பகுதியில் காரவான்கள் (caravanes) நிறுத்தி வைக்கப்படும் இடத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, இந்த விவகாரம் தொடர்பில் ஏற்கனவே லேம்ப் ஃப்ரன்டல் (lampe frontale) இல் இருந்து சேகரிக்கப்பட்ட DNA மாதிரியுடன் Ginoவின் DNA மாதிரிகள் ஒத்துப்போயின.
பின்னர் முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் மூலம் Ginoவின் வீட்டை அண்மித்த பகுதியில் 7.3 டன் வெண்கல கேபிள்கள் (câbles en bronze) மற்றும் ஒரு தொழில்துறை கேபிள் அகற்றும் இயந்திரம் (machine à dénuder câbles) போன்றவை மீட்கப்பட்டன.
ஜென்ஸ் டு வோயஜ் (gens du voyage) சமூகத்தைச் சேர்ந்த Gino இதற்கு முன்னர் வேறு எந்த குற்றச் செயல்களிலும் ஈடுபட்டிருக்கவில்லை என்றாலும் கேபிள் திருட்டு, காவல்துறையினரை தாக்கியமை போன்ற குற்றங்களுக்காக வழக்கு பதிவு செய்யப்பட்டு காவல் துறை தடுப்பில் வைக்கப்பட்டார்.
இதனையடுத்து செப்டம்பர் 18, 2025 அன்று , ஃபான்டெய்ன்பிலோ (Fontainebleau) நீதிமன்றத்தினால், ஒரு வருட கட்டாய சிறை தண்டனை உற்பட இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும், பாதிக்கப்பட்ட ஒரஞ்ச் (Orange) நிறுவனத்திற்கு 22,000 யூரோ இழப்பீடும் அறிவித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.
பிரான்சில் வளர்ந்து வரும் இந்த நூதன திருட்டு காரணமாகத்தான் சைன் எட் மார்ன் (Seine-et-Marne) போன்ற பகுதிகளில் ஒரஞ்ச் (Orange) தொலைபேசி இணைப்புகள் (réseau téléphonique Orange) பெரிய அளவில் பாதிக்கப்படுகின்றன, இது ஆயிரக்கணக்கான பயனர்களின் சேவைகளை (services téléphoniques) பாதிக்கின்றது.
இவ்வாறான திருட்டு சம்பவங்களில் குற்றவாளிகளை இனங்காண டிஎன்ஏ பரிசோதனை (analyse ADN) மற்றும் தொலைபேசி டிராக்கிங் (suivi téléphonique) போன்ற நவீன தொழிநுற்பங்கள் பேருதவியாக இருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிரிவிக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment