பிரான்ஸில் இன்றைய தினம் 18 செப்டம்பர் 2025 வியாழக்கிழமை பல்வேறு பொதுச்சேவை துறைகளால் முன்னெடுக்கப்படும் மாபெரும் வேலை நிறுத்தப் போராட்டம் போக்குவரத்து சேவைகளிலும் பாரியளவு தாக்கத்தை ஏற்படுத்துகிறது. 2026 பட்ஜெட் திட்டத்திற்கு (Budget 2026) எதிராக CGT, FO, Unsa-Mobilité, CFE-CGC போன்ற யூனியன் அமைப்புகள் (Syndicats CGT, FO) தலைமையில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
மொத்தமாக 8 இலட்சம் பேர் களமிறங்கும் இந்த போராட்டத்தில் RATP (Régie Autonome des Transports Parisiens) மற்றும் SNCF (Société Nationale des Chemins de fer Français) ஊழியர்களும் பங்கேற்கிறார்கள். 90% மெட்ரோ சாரதிகள் மற்றும் 80% RER சாரதிகள் இதில் பங்கேற்க உள்ளதால் போக்குவரத்து சேவை பெருமளவு பாதிக்கப்படுகிறது.
மூடப்படும் மெட்ரோ நிலையங்கள், தடைப்படும் சேவை விபரங்கள்:
- பாரிஸ் நகரில் சாரதிகள் தேவையின்றி தானியங்கி (Lignes automatiques) மூலம் இயங்கும் - 1ஆம், 4ஆம், 14ஆம் இலக்கு மெட்ட்ரோக்கள் (Ligne 1, Ligne 4, Ligne 14) தடையின்றி சேவையை வழங்கும்.
- 7ஆம் மற்றும் 9ஆம் இலக்கு மெட்ரோக்கள் (Ligne 7, Ligne 9): மூன்றில் ஒரு சேவை (1/3 du trafic) மட்டும் இயங்கும்.
- 10ஆம் மற்றும் 13ஆம் இலக்கு மெட்ரோக்கள் (Ligne 10, Ligne 13): பரபரப்பான வேலை நேரங்களில் (Heures de pointe) நான்கில் ஒரு சேவை (1/4 du trafic) மட்டும் கிடைக்க கூடியதாக இருக்கும்.
இவை தவிர ஏனைய மெட்ட்ரோக்கள் (Autres lignes métro) சில நேரங்களில் தாமதமாக (Retards) வரும். சில நேரங்களில் முற்றாக தடைப்படும் (Interruptions partielles)
முற்றாக மூடப்படும் முக்கிய நிலையங்கள் (Stations Métro Fermées): போராட்டங்கள் இடம்பெறும் இடங்களுக்கு மிக அண்மையில் இருக்கும் Bastille (Bastille), Concorde (Concorde), Arts et Métiers (Arts et Métiers), Villiers (Villiers), Opéra (Opéra), République (République), Trocadéro (Trocadéro), Sèvres Babylone (Sèvres-Babylone), Invalides (Invalides), Place de Clichy (Place de Clichy) ஆகியவை முழுமையாக மூடப்படும்.
எச்சரிக்கை: சில சேவையில் இருக்கும் மெட்ரோ நிலையங்கள் (Stations sensibles) போராட்டங்கள் அல்லது பாதுகாப்பு நோக்கம் கருதி திடீரென மூடப்படலாம். Gare du Nord (Gare du Nord)
Comments
Post a Comment