Skip to main content

Posts

Showing posts from August, 2025

பிரான்ஸ்: புதிய சட்ட நடைமுறை! தம்பதிகளுக்கு நிதிச்சுமை!!

2025 செப்டம்பர் 1 முதல், மணவிலக்கு (Divorce) தொடர்பான புதிய விதிமுறைகள் உலகளவில் பல நாடுகளில், குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில், நடைமுறைக்கு வந்துள்ளன. இந்த புதிய சட்ட மாற்றங்கள் மணவிலக்கு வழக்குகளை இணக்கமான முறையில் தீர்க்க ஊக்குவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.  இதில் முக்கியமாக, Modes amiables de règlement des différends (இணக்கமான மோதல் தீர்வு முறைகள்) எனும் புதிய விதிமுறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டுரையில், இந்த புதிய மாற்றங்கள், அவற்றின் தாக்கங்கள், மற்றும் இதனால் தம்பதிகளுக்கு ஏற்படும் சவால்கள் பற்றி விரிவாகப் பார்ப்போம். புதிய விதிமுறைகள்: இணக்கமான தீர்வு முறைகள் (Modes Amiables de Règlement des Différends) இந்த புதிய விதிமுறையின் கீழ், மணவிலக்கு வழக்குகளில் நீதிபதி (Juge) தம்பதிகளை உளநல ஆலோசகர் (Conseiller Psychologique) அல்லது மத்தியஸ்தகர் (Médiateur) ஒருவரிடம் அனுப்ப முடிவு செய்யலாம்.  இந்த அறிவுறுத்தலை நீதிபதி வழங்கும்போது, தம்பதிகள் அதனை கட்டாயமாக பின்பற்ற வேண்டும். இந்த அணுகுமுறையானது  மணவிலக்கு வழக்குகளை நீதிமன்றத்திற்கு வெளியே இணக்கமான முறையில் தீ...

மனித இனத்துக்கு எமனாகும் AI! அதிர்ச்சி சம்பவங்களின் பின்னணி!!

  அமெரிக்காவில் ஏற்பட்ட ஒரு துயரமான சம்பவத்தில், ChatGPT போன்ற AI தொழில்நுட்பத்தின் அறிவுரைகளால் தூண்டப்பட்டு, ஒரு நபர் தனது தாயை கொலை செய்து பின்னர் தானும் உயிரை மாய்த்துக்கொண்டார்.  இந்த சம்பவம் அமெரிக்காவின் (États-Unis) கனெக்டிகட் (Connecticut) மாநிலத்தில் உள்ள கிரீன்விச் (Greenwich) பகுதியில் நிகழ்ந்தது, அங்கு 56 வயதான Stein-Erik Soelberg என்பவர் தனது 83 வயது தாய் Suzanne Adams ஐ கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில், அமெரிக்காவின் முன்னணி tech நிறுவனமொன்றில் manager ஆக பணியாற்றிய Stein-Erik Soelberg, உளவியல் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருந்தார் என்றும்.   Williams College இல் பட்டம் பெற்று, Vanderbilt University இல் MBA முடித்த இவர், Netscape மற்றும் Yahoo போன்ற நிறுவனங்களில் 20 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர் என்றும். Stamford, Connecticut இல் வசித்த அவர், lifelong mental illness உடன் போராடி வந்தார் என்றும்.  இவர், தொழில்நுட்பத் துறையில் அனுபவமிக்கவராக இருந்த போதிலும், பாரனோயா (paranoia) போன்ற மனநல ப...

பிரான்சில் மாணவர் கல்விக்காக அரசின் சலுகை திட்டங்கள்!!

  பிரான்ஸ் அரசின் முக்கியமான சமூக உதவித் திட்டங்களில் ஒன்றான AEEH (Allocation d'éducation de l'enfant handicapé), குறைபாடுடைய குழந்தைகளின் கல்வி மற்றும் வளர்ச்சிக்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டமானது வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு நிதி ரீதியில் பாரிய பக்கங்களிப்பை செய்கிறது, குறிப்பாக குழந்தைகளின் கல்வி செலவுகள், சிகிச்சை மற்றும் தினசரி தேவைகளை சமாளிக்க உதவுகிறது.  அண்மையில் கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி 2025 ஏப்ரல் 1 முதல் இந்த உதவித் தொகை மதிப்பீடு செய்யப்பட்டு, அடிப்படைத் தொகை €151.80 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது 2024 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட தொகையை விட 1.7% அதிகமாகும்.  மேலும், 2026 ஏப்ரல் 1 முதல், இந்த உதவி அனைத்து குறைபாடுடைய குழந்தைகளுக்கும் கிடைக்கும் வகையில் ஒழுங்குபடுத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது, இது மருத்துவ செலவுகளை சமாளிக்க தடுமாறும் குடும்பங்களுக்கு பேருதவியாக  இருக்கும்.  AEEH என்பது குழந்தையின் குறைபாடு தொடர்பான செலவுகளை சமாளிக்க உதவும் ஒரு மாதாந்திர உதவித் தொகை. இது 20 வயது வரையிலான குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது, ஆனால் ...

பிரான்சில் இரத்த தானம் தொடர்பில் புதிய நடைமுறைகள் அறிமுகம்

உலகளவில் இரத்த தானம் என்பது ஒரு புண்ணிய செயலாக கருதப்படுகிறது. இருப்பினும் இரத்தம் என்பது ஒரு உயிரை காக்க எவ்வளவு முக்கியமோ அதே போல் ஒரு நபரிடம் இருந்து பெறப்படும் இரத்தம் அதை பயன்படுத்தவுள்ள நோயாளிக்கு எந்தவொரு கெடுதலையும் செய்துவிடக் கூடாது என்பதும் மிகவும் முக்கியமாகும். இதற்காக இரத்த தானத்தில் சில கட்டுப்பாடுகள், விதிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகிறது.  இதில் மிகவும் முக்கியமானதொரு கட்டுப்பாடாக ஒரு நபர் Tattoo(பச்சை குத்துதல்) மற்றும் Piercing (உடல் பாகங்களில் துளையிட்டு தங்கம் வெள்ளி போன்ற ஆபரணங்களை அணிந்து கொள்ளுதல்) செய்த பின்னர் குறிப்பிட்டதொரு காலம் வரை இரத்த தானம் செய்ய கூடாது என்பதாகும்.  பிரான்சில் இதுவரை காலமும் இந்த கால அவகாசம் நான்கு மாதங்களாக இருந்தது ஆனால் நாளைய தினம் (செப்டம்பர் 1 2025) முதல் இந்த கால அவகாசம் இரண்டு மாத காலமாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி இரத்த தானம் செய்பவர்களுக்கும் இரத்த வங்கிகளுக்கும் மகிழ்ச்சியளிக்கிறது.  பிரான்ஸ் இரத்த வங்கிகளில் இருப்பு குறைவாக இருக்கும்  சூழ்நிலையில் இது போன்ற மாற்றங்கள், donors எண்ணிக்கையை அதிகரிக்க உதவும...

பிரான்சில் பிறந்த குழந்தைகளுக்கு இலவச சேவை!!

பிரான்சில் நாளைய தினம் (செப்டம்பர் 1 2025) முதல் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் இலவசமாக அறிய வகையிலான நோய் நிலைமைகளை கண்டறியும் பல பரிசோதனைகளை உள்ளடக்கிய  Neonatal Screening திட்டம் நடைமுறைக்கு வருகிறது.  இதன் மூலம் Rare Genetic Diseases-ஐ கண்டறிய புதிய பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். ஒரு குழந்தை பிறந்து 2-3 நாட்களுக்குள் இந்த சேவை இலவசமாக வழங்கப்படும் இது குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு சிறந்ததொரு முயற்சியாக உள்ளது. இதன் மூலம் Sickle Cell Disease (SCD) க்கான Universal Screening அறிமுகப்படுத்தப்படுவதுடன், Perigenomed Project மூலம் Genome Sequencing-ஐ பயன்படுத்தி பரிசோதனை செய்யும் வசதியும் இணைக்கப்பட்டுள்ளது.  இந்த திட்டம் பிரான்சின் பொது சுகாதார இலக்குகளுடன் இணைந்து, Sickle Cell Disease மற்றும் பிற மரபணு சார்ந்த நோய்நிலைமைகளை கண்டறியும் வகையிலான கடினமான பரிசோதனைகளையும் முன்னெடுக்கிறது.  Sickle Cell Disease (SCD) பிரான்சில், குறிப்பாக ஆப்பிரிக்க, கரீபியன், மற்றும் மத்திய கிழக்கு புலம்பெயர் சமூகங்களில் கண்டறியப்படும் முக்கியமான நோய் நிலைமையாக உள்ளது. இதனடிப்...

பிரான்சில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

  பிரான்சில் நாளை (செப்டம்பர் 1 2025) முதல் ஊழியர்களுக்கான நோய் விடுப்பு (Sick Leave)  தொடர்பில் புதிய விதிமுறை கொண்டு வரப்படுகிறது. மோசடி(fraud) வேலைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் ஒரு ஊழியர் நோய் விடுப்பு (Sick Leave) கோருவதற்கு புதிய secure Cerfa form ஐ சமர்பிக்க வேண்டியது காட்டாயமாக்கப்படுகிறது.  ஏற்கனவே புதிய விதிமுறைகள் பற்றிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு ஜூலை, ஓகஸ்ட் ஆகிய இரண்டு மாதங்களும் grace period ஆக இருக்கும் அதன் பிறகு பழைய forms அல்லது photocopies ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் நாளை முதல் புதிய விதி நடைமுறைக்கு வருகிறது.  பாதுகாப்பை அதிகரிக்க கூடிய இந்த மாற்றம் Health Insurance Fund (CPAM) மூலம் அமல்படுத்தப்படுகிறது, மேலும் ஊழியர்களின் தொழில்சார் நோய் அல்லாத காலத்தில்(employees non-occupational illness) மாதத்திற்கு 2 நாட்கள் சம்பளத்துடன் கூடிய விடுப்பு கிடைக்கும் (2 days per month paid leave acquire).  ஒன்லைன் மூலம் சமர்ப்பிக்க கூடிய புதிய Cerfa Form இன் முக்கிய அம்சங்கள் ஜூலை 1, 2025 முதல் வைத்தியர்கள் (doctors) புதிய secure ...