பிரான்ஸில் இன்றைய தினம் 18 செப்டம்பர் 2025 வியாழக்கிழமை பல்வேறு பொதுச்சேவை துறைகளால் முன்னெடுக்கப்படும் மாபெரும் வேலை நிறுத்தப் போராட்டம் போக்குவரத்து சேவைகளிலும் பாரியளவு தாக்கத்தை ஏற்படுத்துகிறது. 2026 பட்ஜெட் திட்டத்திற்கு (Budget 2026) எதிராக CGT, FO, Unsa-Mobilité, CFE-CGC போன்ற யூனியன் அமைப்புகள் (Syndicats CGT, FO) தலைமையில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. மொத்தமாக 8 இலட்சம் பேர் களமிறங்கும் இந்த போராட்டத்தில் RATP (Régie Autonome des Transports Parisiens) மற்றும் SNCF (Société Nationale des Chemins de fer Français) ஊழியர்களும் பங்கேற்கிறார்கள். 90% மெட்ரோ சாரதிகள் மற்றும் 80% RER சாரதிகள் இதில் பங்கேற்க உள்ளதால் போக்குவரத்து சேவை பெருமளவு பாதிக்கப்படுகிறது. மூடப்படும் மெட்ரோ நிலையங்கள், தடைப்படும் சேவை விபரங்கள்: பாரிஸ் நகரில் சாரதிகள் தேவையின்றி தானியங்கி (Lignes automatiques) மூலம் இயங்கும் - 1ஆம், 4ஆம், 14ஆம் இலக்கு மெட்ட்ரோக்கள் (Ligne 1, Ligne 4, Ligne 14) தடையின்றி சேவையை வழங்கும். 7ஆம் மற்றும் 9ஆம் இலக்கு மெட்ரோக்கள் (Ligne 7, Ligne 9)...
Global daily tamil news and updates