Skip to main content

Posts

பிரான்ஸ்: ஆசிரியரிடம் அத்துமீறிய மாணவன்! தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில்!!

புதன்கிழமை, செப்டம்பர் 24, 2025 இன்றைய தினம் பிரான்சின் பாஸ்-ரைன் (Bas-Rhin) மாவட்டத்தில், ஸ்ட்ராஸ்போர்க் (Strasbourg) நகருக்கு அருகே உள்ள பென்ஃபெல்ட் (Benfeld) என்ற சிறிய நகரில் உள்ள  ராபர்ட்-ஷூமன் கல்லூரியில் (Collège Robert-Schuman) ஆசிரியர் ஒருவரை அதே கல்லூரியில் பயிலும் மாணவர் ஒருவர் தாக்கியுள்ளார்.  இன்று காலை 8:15 மணியளவில் குறித்த கல்லூரியில் பயிலும் 14 வயதுடைய மாணவன் கல்லூரியில் சங்கீத ஆசிரியராக பணியாற்றும்  66 வயதுடைய பெண் ஆசிரியரை கத்தியால் தாக்கியுள்ளார். இந்த சம்பவம் பிரான்ஸ் கல்வி முறையில் (Système éducatif français) பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,  பிரான்ஸ் அரசு நிர்வாகத்தின் கீழ் இயங்கும் (Établissement public) இந்த பள்ளியில் சுமார் 800 மாணவர்கள்  கல்வி கற்கின்றனர். வழக்கம் போல இன்று  ஆசிரியர் மற்றும் மாணவர்கள்  சங்கீத பாட கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த போது மேற்குறித்த மாணவன் தீடிரென ஆசிரியருக்கு முன் கத்தியுடன் வந்து ஆசிரியரின் முகத்தில் தாக்கியுள்ளார், அடுத்த கணமே தனது துவிச்சக்க...

பிரான்ஸ்: புலம்பெயர்ந்த நபரின் துணிச்சலான செயல்! இறுதியில் பொலிஸில் சிக்கிய பரிதாபம்!!

22 செப்டம்பர் 2025 அன்று அதிகாலை 5 மணியளவில் தலைநகர் பாரிஸில் புலம்பெயர்ந்து பிரான்சில் வாழும் நபர் ஒருவர் துணிச்சலாக RATP நிறுவனத்தின் இரவு நேர சேவையில் இருந்த பேருந்து ஒன்றை திருட முற்பட்டுள்ளார்.  பாரிஸின் 15ஆம் வட்டாரத்தில் (15e arrondissement) உள்ள மாண்ட்பார்னாஸ் தொடருந்து நிலையத்தில் (Gare Montparnasse) நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்தையே இவர் திருட முற்பட்டுள்ளார் இருப்பினும் காவல்துறையினர் இவரை பான்யோலெ (Porte de Bagnolet) பகுதியில் மடக்கிப் பிடித்து கைது செய்துள்ளனர்.  சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,  RATP நிறுவனத்தின் நேர அட்டவணைக்கு அமைவாக அதிகாலை 5 மணிக்கு இரவு நேர சாரதிகளுக்கான ஒய்வு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் இரவு நேர சேவையில் ஈடுபடும் N13 இலக்க பேருந்தின் சாரதி, மாண்ட்பார்னாஸ் தொடருந்து நிலையத்தில் (Terminus Gare Montparnasse) அதிகாலை 5 மணிக்கு பேருந்தை நிறுத்திவிட்டு வெளியில் சென்றிருந்தார்.  அந்த சமயத்தில், அங்கு தங்கியிருந்த புலம்பெயர்ந்து வந்து வீதிகளில் வசிப்பவர்களில்(Homme SDF Paris) ஒருவர் பேருந்தில் ஏறி, சாரதி இருக்கையி...

பாரிஸ்: மழையுடன் மலர்ந்த இலையுதிர் காலம்! சுற்றுலாப் பயணிகள் தவற விடக்கூடாத தருணம்!

  செப்டம்பர் 22, 2025 இன்று முதல் பிரான்சில் இலையுதிர்காலம் (L’automne) காலம் ஆரம்பமாகிறது என பிரான்ஸ் வானிலை ஆய்வு மையம் (Météo France) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி உள்ளூர் நேரப்படி மாலை 8:19 மணிக்கு (19:19 UTC) சூரியனின் சமநிலை நிகழ்வு (Équinoxe d’automne) நிகழ்கிறது. இது வடக்கு பந்தையில் (Hémisphère Nord) இலையுதிர்காலத்தின் (Automne) முறையான ஆரம்பத்தைக் குறிக்கிறது. இந்த பருவத்தில் வெப்பநிலை மெது மெதுவாகக் குறைந்து அடுத்து வரும் வாரங்களில் மழை நாட்கள் (Jours de pluie)  அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. இலையுதிர் காலத்தின் ஆரம்ப நாட்களான இந்த வாரத்தில் பிரான்ஸின் வடக்கு பகுதிகளில் (Nord de la France) அடர்த்தியான மழை (Précipitations intenses) பதிவாகும் என பிரான்ஸ் வானிலை மையம் (Météo France) எச்சரிக்கை விடுத்துள்ளது.  செப்டம்பர் 20 ஆம் திகதி வரை வெப்பமான காற்று (Air estival) நிலவியது என்றாலும், செப்டம்பர் 21 முதல் குளிர்ந்த காற்று (Air frais) பரவத் தொடங்கியுள்ளது. இதனால் வெப்பநிலை 2-3°C குறைவாக (Températures inférieures aux normales) காணப்...

பாரிஸ்: பிரபல விடுதியில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்! சுற்றுலா பயணிகள் எச்சரிக்கை!

  பரிஸ் (Paris), செப்டம்பர் 22, 2025  உலகப் புகழ் பெற்ற சுற்றுலாத் தளமான பாரிஸ்(Paris) நகரின் லியோன் (Gare de Lyon) ரயில் நிலையத்துக்கு அருகில் உள்ள 12வது வட்டாரத்தில் (12th Arrondissement) உள்ள பிரபலமான மதுபான விடுதி ஒன்றில் 19 வயது யுவதிக்கு பாலியல் ரீதியில் அநீதி இழைக்கப்பட்டுள்ளமை பாரிஸ் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,  பாரிஸ் நகரின் 12ஆம் வட்டாரத்தில் அமைந்துள்ள மிகப்பிரபலான ரூஃப்டாப் மதுபான விடுதி (Rooftop Bar)-யின் அடித்தளத்தில் (Basement) இந்த பயங்கர சம்பவம் நிகந்துள்ளது. சம்பவ தினமான  20 செப்டம்பர் 2025 சனிக்கிழமையன்று அதிகாலை நான்கு மணியளவில் சம்பவம் இடம்பெற்ற குறித்த விடுதியில் இருந்து காவல்துறையினருக்கு பாலியல் அத்துமீறல் தொடர்பில் புகாரளிக்கப்பட்டது.  சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் குறித்த பெண்ணை மீட்டு பாதுகாப்பளித்தனர். அதனைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் இருந்து பாதிக்கப்பட்ட பெண் மதுபான விடுதி ஊழியர் (Bar Employee) ஒருவரால் ஏமாற்றப்பட்டு அடித்தளத்தில் (Basement)இ...

பிரான்ஸ்: அதிரவைத்த கொலை முயற்சி - இராணுவ வீரரின் சைக்கோ குணம்! ஒருவர் பலி!!

செப்டம்பர் 19 ,2025 அன்று  சீன்-எட்-மார்ன் (Seine-et-Marne) மாவட்டத்தில், சூப்பெஸ்-சர்-லோயிங் (Souppes-sur-Loing) நகரில் நிகழ்ந்த கொலை முயற்சி சம்பவத்தில் ஒருவர் பலியாகியுள்ளார். தனது சொந்த குடும்பத்தினரையே கொலை செய்ய துணிந்த நபர் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார்.  சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,  சூப்பெஸ்-சர்-லோயிங் (Souppes-sur-Loing) நகரின் அமைதியான குடியிருப்புப் பகுதியொன்றில், சம்பவ தினத்தன்று இரவு 7 மணியளவில், சம்பவம் நிகழ்ந்த வீட்டிற்குள் இருந்து "நான் உன்னை கொன்றுவிடுவேன்!" போன்ற மிரட்டும் பாணியிலான வார்த்தைகள் அக்கம் பக்கத்துக்கு வீடுகளில் இருந்தவர்களுக்கு கேட்டுள்ளது.    இதனையடுத்து ஊர் மக்கள் போலீசாரிடம் முறைப்பாடு செய்துள்ளனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் குறித்த வீட்டிற்குள் செல்ல முற்பட்ட போது நடுத்தர வயது ஆண் ஒருவர் வீட்டை விட்டு வெளியில் வர மறுத்ததோடு காவல்துறையினரையும் தாக்க முற்பட்டுள்ளார்.  குறித்த நபர் 58 வயதுடைய முன்னாள் இராணுவ வீரர் எனவும் அவர் தனது சொந்த குடும்ப உறுப்பினர்களுக்...

பிரான்ஸ்: தொலைபேசி இணைப்பை முடக்கிய நூதன திருட்டு! DNA மூலம் சிக்கிய குற்றவாளி!!

பிரான்ஸின் சைன் எட் மார்ன் (Seine-et-Marne) மாவட்டத்தில் பாரியளவிலான கொள்ளை சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதில் பிரபல தொலைபேசி நிறுவனமான ஒரஞ்ச் (Orange) நிறுவனத்தின் பல்லாயிரம் யூரோ மதிப்பிலான சொத்துக்கள் களவாடப்பட்டுள்ளன. குறித்த சம்பவத்தோடு தொடர்புடைய 65347 யூரோ பெறுமதியிலான  7.3 டன் வெண்கல கேபிள்கள் (câbles en bronze) மீட்கப்பட்டுள்ளன.  சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,  கடந்த மார்ச் 29, 2025 அன்று அதிகாலை 01:25 மணியளவில் அச்சேர்ஸ்-லா-ஃபோரெட் (Achères-la-Forêt) என்ற அமைதியான கிராமத்தில் அமைக்கப்பட்டிருந்த ஒரஞ்ச் (Orange) நிறுவனத்தின் தொலைபேசி இணைப்பு (téléphone câbles) அமைப்புகளின் ஒரு டிராப் (trappe) அலாரம் தீடிரென ஒலித்தது.  இதனையடுத்து குறித்த பகுதியை நோக்கி விரைந்த நெமூர்ஸ் (Nemours) PSIG (Peloton de Surveillance et d'Intervention de la Gendarmerie) காவலர்கள், அங்கு முகமூடி அணிந்திருந்த மூன்று கொள்ளையர்கள்  அங்கிருந்த வெண்கல கேபிள்களை வெட்டி எடுத்து கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சிக்குள்ளாகினர்.  காவல்துறையினர் அவர்களை தடுக்க முற்பட்டபோதும் கொ...

ஒரு கோப்பை பால் - சிறுகதை

அது ஒரு கோடை காலம் அமெரிக்காவின் இந்தியனாவில் மாலைச் சூரியன் மெல்ல மங்கிய ஒளியில் மறைந்து கொண்டிருந்தான். ஒரு சிறிய கிராமத்து பாதையில், பழைய சைக்கிளின் மணி அவ்வப்போது ஆங்காங்கே ஒலித்தது. வீடு வீடாகச் சென்று பொருட்களை விற்பனை செய்வது தான் அந்த சிறுவனின் வேலை.  சார்லஸ், வயது பன்னிரண்டு-பதின்மூன்று இருக்கும். நல்ல புத்திசாலி சிறுவன், இயல்பாகவே அறிவியலில் அதீத ஆர்வம் கொண்டவன், வேலை செய்யும் நேரம் தவிர்ந்த மற்ற ஒய்வு நேரங்களில் வீட்டை சுற்றியுள்ள சூழலை ஆராய்வது, பொது நூலகத்தில் புத்தகங்களை இரவல் பெற்று வாசிப்பது என அவனது ஆர்வம் ஒரு கல்வி சமூகத்தை நோக்கி இருந்தது. அது இரண்டாம் உலகப்போருக்கு முந்தைய காலம் போர் பற்றிய சலசலப்புகள் பரவலாக ஆங்காங்கே பேசப்பட்டுக் கொண்டிருந்த காலம், நாட்டிலுள்ள மக்களில் சிலர் நாட்டிற்காக தேசப்பற்றோடு இராணுவத்தில் சேர்வார்கள். ஆனால் பலர் அரச சட்டங்களுக்கு கட்டுப்பட்டு கட்டாயத்தின் பெயரில் சேர்க்கப்படுவார்கள். அப்படித்தான் சார்லஸின் தந்தையும் அவனது மூன்று மூத்த சகோதரர்களும் போர் வீரர்களானார்கள். ஆக இப்போதைக்கு சார்லஸ் தான் வீட்டுக்கு மூத்தவன் என்றாகி விட்டது. தாய...

பாரிஸ்: RATP, SNCF ஊழியர்கள் வேலை நிறுத்தம்!! தடை ஏற்படும் ரயில், பேருந்து விபரங்கள் உள்ளே!!

  பிரான்ஸில் இன்றைய தினம் 18 செப்டம்பர் 2025 வியாழக்கிழமை பல்வேறு பொதுச்சேவை துறைகளால் முன்னெடுக்கப்படும் மாபெரும் வேலை நிறுத்தப் போராட்டம் போக்குவரத்து சேவைகளிலும் பாரியளவு தாக்கத்தை ஏற்படுத்துகிறது. 2026 பட்ஜெட் திட்டத்திற்கு (Budget 2026) எதிராக CGT, FO, Unsa-Mobilité, CFE-CGC போன்ற யூனியன் அமைப்புகள் (Syndicats CGT, FO) தலைமையில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.  மொத்தமாக 8 இலட்சம் பேர் களமிறங்கும் இந்த போராட்டத்தில் RATP (Régie Autonome des Transports Parisiens) மற்றும் SNCF (Société Nationale des Chemins de fer Français) ஊழியர்களும் பங்கேற்கிறார்கள். 90% மெட்ரோ சாரதிகள் மற்றும் 80% RER சாரதிகள் இதில் பங்கேற்க உள்ளதால் போக்குவரத்து சேவை பெருமளவு பாதிக்கப்படுகிறது.  மூடப்படும் மெட்ரோ நிலையங்கள், தடைப்படும் சேவை விபரங்கள்:  பாரிஸ் நகரில் சாரதிகள் தேவையின்றி தானியங்கி (Lignes automatiques) மூலம் இயங்கும் - 1ஆம், 4ஆம், 14ஆம் இலக்கு மெட்ட்ரோக்கள் (Ligne 1, Ligne 4, Ligne 14) தடையின்றி சேவையை வழங்கும்.  7ஆம் மற்றும் 9ஆம் இலக்கு மெட்ரோக்கள் (Ligne 7, Ligne 9)...

தள்ளி விட்டது யார்......??? - சிறுகதை

(முற்றிலும் புனையப்பட்ட கதை) உறையூர் இராச்சியத்தை வரகுண வர்மன் எனும் மன்னன் ஆட்சி புரிந்து வந்தான். அவனது நல்லாட்சியில் இராச்சியம் வளம் பெற்று, மக்கள் நலமுற்று செல்வ செழிப்புடன் வாழ்ந்தனர், உணவு, உடை, பொன், பொருள், வைரம், வைடூரியம் என அனைத்து செல்வங்களும் அனைவருக்கும் கொட்டிக்கொடுத்தான் வரகுண வர்மன், மக்களும் மன்னன் மீது மிகுந்த அன்பும் மரியாதையும் கொண்டிருந்தார்கள். மன்னனுக்கு ஒரு மக்கள் இருந்தால் பெயர் மங்கையற்கரசி, பேரழகி, இளவரசிகளுக்கு உரிய அத்தனை அழகும் திறமையும் ஒருங்கே பெற்றவள், மன்னன் எட்டடி என்றால் இளவரசி பதினாறடி மக்களுக்கு வாரி கொடுப்பதில் வள்ளல், அவளது இந்த குணமும் அழகும் அவளை மக்களது செல்லப் பிள்ளையாக ஆக்கியது. இளவரசிக்கு ஓவியம் தீட்டுவதில் பேரார்வம் பறந்து விரிந்திருந்த அரண்மனையில் அவளது ஓவியங்கள் நிறைந்திருக்கும்.  தந்தையின் வெற்றிக்கு கதைகள், ராச்சியத்தில் நடக்கும் பெருவிழாக்கள், விதை விதைப்பு, அறுவடை, கோவில் திருவிழாக்கள், என அத்தனை நிகழ்வுகளையும் ஓவியமாக தீட்டுவாள்,  அவளது மொழி ஓவியம்தான் வாய் பேச இயலாவிட்டாலும் தன தேவையை ஓவியத்தினூடாக உணர்த்திடும் திறமை கொண்...

பிரான்ஸ்: வன்முறை குழுக்களால் ஆபத்து! கடைகளுக்கு காவல்துறை எச்சரிக்கை!!

  பிரான்ஸில் அரசின் 2026 ஆம் ஆண்டிற்கான நிதித் திட்டங்களை எதிர்த்து நாட்டிலுள்ள CFDT, CGT, FO, CFE-CGC, CFTC, UNSA, FSU, Solidaires ஆகிய முக்கியமான எட்டு சங்கங்கள் ஒன்றிணைந்து வேலை நிறுத்த போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன. அந்தவகையில் நாளை  18 செப்டம்பர் 2025 வியாழக்கிழமை 'கருப்பு நாள்' (Journée Noire) என்ற பெயரில் ஆர்ப்பாட்டம் இடம்பெறவுள்ளது.   ஏற்கனவே செப்டம்பர் 10, 2025 அன்று 'பிளாக் எவ்ரிசிங்' (Bloquons Tout) என்ற பெயரில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் 197,000 முதல் 250,000 பேர் வரை கலந்துகொண்டிருந்த நிலையில் நாளை இடம்பெறவிருக்கும் ஆர்ப்பாட்டத்தில் சுமார் 800,000  பேர் வரை கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.  இந்நிலையில், பாரிஸ் மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் உள்ள கடைகளின் உரிமையாளர்களுக்கு பொலிஸ் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காவல்துறையினரால் கடை உரிமையாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட மின்னஞ்சலில் வன்முறை குழுவின் தாக்குதலுக்கு இலக்காகாமல் இருக்க போராட்டம் நடைபெறவுள்ள வழியில் உள்ள அனைத்து கடைகளையும் மூடுமாறு அறிவுறுத்தியுள்ள...

பாரிஸில் நடந்த விபத்து! ஆபத்தாகும் நடை பாதைகள்!!

  பிரான்ஸ், பாரிஸ் நகரின் ஆறாம் வட்டார (6th Arrondissement)  பகுதியில் நாம் நினைத்து பார்த்திடாததொரு விசித்திர விபத்து (Accident) நேர்ந்துள்ளது. 15 செப்டம்பர் 2025 திங்கட்கிழமை அன்று நடந்த இந்த வினோத சம்பவம் இப்படியெல்லாம் விபத்து நடக்குமா...? என அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இளைஞர் ஒருவர் நடைபாதையில் (Sidewalk) நடந்து சென்றுகொண்டிருந்த வேளை அந்த நடைபாதைக்கு மிக அருகிலிருந்த கட்டடம் ஒன்றின் பால்கனியில் (Balcony) தொங்கவிடப்பட்டிருந்த பழமையான அலங்கார விளக்கு (Antique Lamp) திடீரென அவ்விடத்தை கடக்க முற்பட்ட மேற்குறித்த இளைஞரின் தலையில் விழுந்துள்ளது. இந்த எதிர்பாராத விபத்து பாரிசில் பொது பாதுகாப்பு (Public Safety) மற்றும் பராமரிப்பு குறித்து கேள்வி எழுப்பியுள்ளது.  சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது.  பாரிஸின் அதிக பரபரப்பான நடைபாதைகளில் ஒன்றான ஆறாவது வட்டாரத்தில் அமைந்துள்ள இந்த நடைபாதையில் சம்பவ தினத்தன்று விபத்துக்குள்ளான இளைஞர் நடந்து வந்து கொண்டிருந்தார், உலகின் பழம்பெரும் நகரங்களில் ஒன்றான பாரிஸில் பழமையை நிலைநாட்டும் அலங்கார வேலைப...

பிரான்ஸ்: ஈரோ மில்லியன் விளையாட்டு! மீண்டும் ஒரு மில்லியன் ஈரோ வென்ற நபர்!!

  ஐரோப்பிய யூனியன் (European Union) நாடுகளான பிரான்ஸ் (France), ஸ்பெயின் (Spain), போர்த்துக்கல்(Portugal) மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளில் விளையாடப்படும் சர்வதேச சீட்டிழுப்பு (International Lottery) விளையாட்டின், கடந்தவார சீட்டிழுப்பில் பிரான்ஸ் குடியுரிமை கொண்ட  நபர் ஒருவர் ஒரு மில்லியன் யூரோ (Million Euros) பரிசினை வென்றுள்ளார்.  இதில் சிறப்பான விடயம் என்னவென்றால் இதே நபர் ஏற்கனவே கடந்த 2023 ஆம் ஆண்டு நடந்த யூரோமில்லியன் (EuroMillions) விளையாட்டிலும் ஒரு மில்லியன் யூரோ (Million Euros) பரிசினை வென்றிருந்தார். இவ்வாறு இரண்டு ஆண்டுகளுக்குள் இரண்டு முறை பரிசை வென்றுள்ளமை அனைவரையும் ஆச்சரியத்திற்குட்படுத்தியுள்ளது.  பிரான்ஸின் அதிகாரப்பூர்வ சீட்டிழுப்பு நிறுவனமான ஃப்ரான்செஸ் டெஸ் ஜியூ (Française des Jeux - FDJ) இவரது இந்த வெற்றியை உறுதிப்படுத்தியுள்ள நிலையில் லொட்டரி உலகிலும் இந்நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  இந்த பரிசுத்தொகையானது யூரோமில்லியன் (EuroMillions) இன், மை மில்லியன் (My Million) என்ற சிறப்பு பிரெஞ்ச் டிரா (French Draw) மூலம் கிடைத்து...

பிரான்சில் துயரச் சம்பவம்! படுகொலை செய்யப்பட்ட ஆண்!!

  நேற்று ஞாயிற்றுக் கிழமை (14 செப்டம்பர் 2025) இரவு 12.30 மணியளவில் பிரான்சின் Fontenay-sous-Bois (Val-de-Marne) நகரில் கொடூரமான படுகொலை சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. இந்த தாக்குதலில் 40 வயதுடைய ஆண் ஒருவர் சம்பவ இடத்திலேயே மரணித்துள்ளார். இது பிரான்ஸ் (France) இல் கத்திக்குத்து (couteau attaques)  தாக்குதல்களின் அதிகரிப்பை (hausse des violences) பிரதிபலிக்கிறது. சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, சம்பவ தினத்தன்று நள்ளிரவு 12:30 மணி அளவில் Allée du Buisson-de-la-Bergère (அல்லீ டு புய்சோன் டி லா பெர்ஜெர்) பகுதி அருகே, rue Jean-Zay (ரியூ ஜான்-ஜே) மற்றும் avenue Charles-Garcia (அவென்யூ சார்ல்ஸ்-கார்ஸியா) இடுக்கில் மரணித்த 40 வயது ஆண் நின்றிருந்தார்.  அந்த நேரம் கத்தியுடன் அங்கு வந்த இரண்டு இளைஞர்கள்(deux agresseurs) அவரை சரமாரியாகத் தாக்கியுள்ளனர். உடலின் பல இடங்களில் ஆழமான காயங்கள் ஏற்படும் வரை தாக்குதலைத் தொடர்ந்துள்ளனர், இவ்வாறு அவரது கழுத்துப் பகுதியில் ஏற்பட்ட ஆழமான காயம் சம்பவ இடத்திலேயே அவரது உயிரைப் பறித்தது.  அங்கு இடம்பெற்ற அனைத்து சம்பவத்தையும் நேரில் கண்...

பிரான்ஸ்: கோர விபத்தில் சிக்கிய பாடசாலை பேருந்து! 17 பேர் படுகாயம்!!

  தெற்கு பிரான்சின் லோட் (Lot) மாவட்டத்தில் உள்ள கஹோர்ஸ் (Cahors) நகரில், நிகழ்ந்த பயங்கர விபத்து ஒன்றில் 17 பாடசாலை மாணவர்கள்  படுகாயமடைந்துள்ளனர். இன்று திங்கட்கிழமை செப்டம்பர் 15 2025  காலை 07.20 மணியளவில் பாடசாலை மாணவர்களை ஏற்றி சென்ற பாடசாலை பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகி உள்ளது.  விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது, செமின் டெஸ் டுராண்ட்ஸ் (Chemin des Durands) பகுதியில், லெஸ் ஜூனீஸ் (Les Junies) என்ற ஊரிலிருந்து கஹோர்ஸ் (Cahors) நகர மையத்திற்கு சென்று கொண்டிருந்த எவிடென்ஸ் (Évidence) நிறுவனத்தின் 16 எண் பேருந்து (Bus line 16) திடீரென கட்டுப்பாட்டை இழந்து வழி மாறி மரம்(Arbre) ஒன்றில் மோதியது.  வேகக் கட்டுப்பாட்டை இழந்து அதி உயர் வேகத்தில் மரத்தில் மோதியதால் பேருந்து திரும்பி விழுந்துள்ளது. அதில்  38 மாணவர்கள் (Collégiens et Lycéens), ஆசிரியர் ஒருவர், மற்றும் பேருந்து சாரதி ஒருவர் என மொத்தமாக 40 பேர் பயணித்தனர். அவர்களில் 17 பேருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது.  இது குறித்து விபத்து நிகழ்ந்த பிராந்தியத்தின் ஆளுநர் கிளேரா ரௌலின் (Claire Raul...

பிரான்ஸ்: கிறிஸ்துமஸ் விடுமுறை டிக்கெட்டுகள் விற்பனைக்கு! ஐரோப்பாவை சுற்றி பார்க்க சிறந்த வாய்ப்பு!

  ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் என்றாலே அனைவருக்கும் கொண்டாட்டம் தான் ஏனென்றால் மார்கழி மாதத்தில் கிடைக்கும் நீண்ட விடுமுறையில் ஒவ்வொருவரும் தம் வசதிக்கேற்ப சிலர் உள் நாட்டிலேயே ஊர் சுற்றி பார்க்கவும், சிலர் நாடு விட்டு நாடு சென்று உலகம் சுற்றி பார்க்கவும் திட்டமிடுவர்.  அந்த வகையில் 2025 ஆம் ஆண்டுக்கான கிறிஸ்மஸ் விடுமுறை (Christmas Holiday) மற்றும் புத்தாண்டு (New Year) விடுமுறையை முன்னிட்டு பயணங்களை திட்டமிடும் பயணிகளுக்கான ரயில் பயண டிக்கெட்டுகள் அல்லது பயணச்சிட்டைகள் (Travel Tickets) விற்பனை இன்றைய தினம் திங்கட்கிழமை 15 செப்டம்பர் 2025 முதல்ஆரம்பமாகியுள்ளது.  டிக்கெட்டுகள் அல்லது பயணச்சிட்டைகள் (Travel Tickets) ஒக்டோபர் 1, 2025-க்கு பின்னர் பயணங்களைத் (Post-October Travel)  திட்டமிட்டிருக்கும் பயணிகளுக்கானது.  இன்று திங்கட்கிழமை முதல் உங்களது பயணச்சிட்டைகளை முன்பதிவு செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி பயண ஆர்வலர்களுக்கு (Travel Enthusiasts) மகிழ்ச்சியானதொரு தகவலாகும்.  Trenitalia மற்றும் Eurostar: சர்வதேச பயணச்சேவைகள் (International Travel ...

பிரான்ஸ்: உணவகத்தில் ஏற்பட்ட விபத்து! காயங்களுடன் தப்பிய வாடிக்கையாளர்கள்!!

  பிரான்சின் Juvisy-sur-Orge (Essonne) நகரில் செப்டம்பர் 13, 2025 சனிக்கிழமையன்று நண்பகல் காரொன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து Gare de Juvisy-sur-Orge (Juvisy-sur-Orge ரயில் நிலையம்) அருகிலுள்ள fast-food உணவகத்தின் (restaurant fast-food) கண்ணாடி வாசலை உடைத்துக் கொண்டு உள்ளே பாய்ந்ததில் விபத்து ஏற்பட்டுள்ளது.  சம்பவம் குறித்து தெரியவருவதாவது, காரின் சாரதியான 95  வயது முதியவருக்கு காரை செலுத்திக் கொண்டிருக்கும் பொழுது திடீரென மயக்க நிலை ஏற்பட்டதால் கார் வேகக் கட்டுப்பாட்டை இழந்து உணவகத்திற்குள் பாய்ந்துள்ளது.  விபத்தின் போது உணவகத்திற்குள் இருந்த வாடிக்கையாளர்களை சிலருக்கும் காயங்கள் ஏற்பட்டுள்ளன இருப்பினும் எவரும் பலத்த காயங்களுக்கு உள்ளாக்கவில்லை என காவல்துறை  (police Juvisy-sur-Orge) தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.  Juvisy-sur-Orge ரயில் நிலையம் (Gare de Juvisy-sur-Orge), பாரிஸ் (Paris) நகருக்கு அருகிலுள்ள , இந்த நகரத்தின் மிகவும் நெரிசல் நிறைந்த இடங்களில் ஒன்று. தினசரி கிட்டத்தட்ட 90,000 பயணிகள் (voyageurs RER) RER D மற்றும் RER B ரயில்கள் மூலம் பயணம் செய்...

பாரிஸ் சம்பவங்கள் தீவிரம்: பிரான்ஸ் பொருளாதாரத்துக்கு புதிய சவால்

  பிரான்ஸ் பாரிஸ் (Paris) நகரில் உள்ள உலகப் புகழ்பெற்ற (Paris) ஃபிள் கோபுரம் (Eiffel Tower) அருகே செப்டம்பர் 13 2025 சனிக்கிழமையன்று Pont de l'Alma மேம்பாலத்தில் (Pont de l'Alma Bridge) அதிர்ச்சி தரும் கத்திக்குத்து தாக்குதல் (Knife Attack) சம்பவம் ஒன்று தாக்குதல் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.  இந்நிகழ்வானது பாரிஸ் நகரின் பாதுகாப்பு  (Paris Security)  குறித்தும், பாரிஸில் அமைந்துள்ள பிரபலமான சுற்றுலாத் தளங்களின் (Tourist Attractions) பாதுகாப்பு குறித்தும் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.  செப்டம்பர் 13, 2025 சனிக்கிழமை இரவு நிகந்த இந்த பயங்கரமான தாக்குதல் (Violent Attack) இரண்டு தனி நபர்களுக்கிடையில் நடந்த மோதலாகும். இதில் ஒருவர் மற்றொரு நபரை பலமுறை கத்தியால் குத்தியதாக (Stabbing Incident) காவல்துறை (Paris Police) தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.  இதன்போது பலத்த காயங்களுக்குட்பட்ட குறித்த நபர்(Victim) உயிருக்கு ஆபத்தான நிலையில் பாரிஸில் உள்ள மருத்துவமனையில் (Paris Hospital) அவசர சிகிச்சைப் பிரிவில் (Emergency Care) அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்....

பிரான்ஸ்: இளைஞர்களின் புதிய போதை பழக்கம்! கடுமையாக பாதிப்படையும் பொது சேவை நிறுவனம்!!

  பிரான்சில் இளைஞர்களிடையே பிரபலமடைந்துள்ள  ‘சிரிப்பு வாயு’ (Gaz Hilarant) காரணமா நாட்டை சுத்தம் செய்யும் நிறுவனங்கள் பாரிய சவால்கள் மற்றும் இழப்புகளை சந்திக்கின்றன. இந்த விடயம் குறித்து கழிவு அகற்றல் நிலையங்கள் (Waste Treatment Facilities) தரப்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டில் இதற்கு முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் அடுத்தடுத்து வரும் ஒவ்வொரு ஆண்டிலும் அதிக இழப்பு நிகழ்ந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  சிறிய அலுமினிய குடுவைகளினுள்(Aluminum Canisters) அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் இந்த  ‘சிரிப்பு வாயு’ (Gaz Hilarant) ஐப் பயன்படுத்திய பின்னர் குப்பையோடு குப்பையாக அந்த குடுவைகளையும் குப்பை தொட்டியினுள் இடுகிறார்கள்.  இவற்றை கழிவு அரைக்கும் இயந்திரங்களுக்குள் (Waste Processing Machines) போட்டு செயன்முறைக்குட்படுத்தும் போது குறித்த சிரிப்பு வாயு குடுவைகளில் எஞ்சியிருக்கும் வாயுக்கள் ஏனைய வாயுக்களுடன் கலந்து இரசாயன மாற்றங்கள் ஏற்பட்டு வெடிக்கின்றன.  இந்த வெடிப்பு (Explosions) செயன்முறை ஒவ்வொரு இயந்திரத்திலும் சுழற்சி முறையில் மீண்டும் மீண்டும் ...

வன்முறைத் தாக்குதல் திட்டம் முறியடிப்பு: பாரிஸ் பகுதியில் சிறுவர்கள் கைது, வழக்கு பதிவு!

பாரிஸ் நகரை அண்மித்த பகுதிகள் உற்பட பிரான்ஸின் பல பகுதிகளில் ஜிஹாதி (Jihadist)பயங்கரவாதத் தாக்குதல்களைத் திட்டமிட்டதாக, சந்தேகத்தின் அடிப்படையில் இரண்டு சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கைது நடவடிக்கையானது செப்டம்பர் 8ஆம் திகதி திங்கட் கிழமையன்று இடம்பெற்றுள்ளது.  கைதானவர்களில் 16 வயதுடைய சிறுவன் ஐ.எஸ்.ஐ.எஸ் (ISIS) போன்ற பயங்கரவாதக் குழுவுடன் இணைந்து செயற்படுவதாகவும் ஒன்றுக்கும் மேற்பட்ட பயங்கரவாத சம்பவங்களை அரங்கேற்ற திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகிமையை தொடர்ந்தே இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து குறித்த சிறுவன் நீதிமன்ற கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.  இதன் போது கைதான மற்றொரு காவல்துறையினரால் விடுதலை செய்யப்பட்டதோடு அவர் மீது எவ்விதமான வழக்குகளும் இதுவரை தாக்கல் செய்யப்படவில்லை. இதே வழக்கில் சார்த் மற்றும் பாரிஸ் நகர் பகுதிகளில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக சந்தேகத்தின் அடிப்படையில் Sarthe பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய இன்னொரு சிறுவனும் செப்டெம்பர் 1ஆம் திகதியன்று கைது செய்யப்பட்டு காவல்துறை தடுப்பில் வைக்கப்பட்டுள்ளார்....

AirPods Pro 3 வெளியானது! ஆனால் பிரான்ஸ் பயனர்களுக்கு தடை!

  பிரபல கையடக்க தொலைபேசி நிறுவனமான ஆப்பிள்(Apple Inc.) தனது மூன்றாம் தலைமுறை ஏர்பொட்ஸ் ப்ரோ (AirPods Pro 3) கருவியை உலகளவில் அறிமுகப்படுத்தியுள்ளது, இது வாடிக்கையாளர்களுக்கு உயர்தர ஓடியோ அனுபவத்தை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.  ஆனால் இதில் புதிதாக இணைக்கப்பட்டுள்ள அம்சம் காரணமாக பிரான்ஸ் உட்பட்ட ஓரோப்பிய நாடுகளில் இந்த கருவியை  மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவது பெரும் சவாலாக உள்ளது.  இந்த ஏர் பாட்ஸ் (AirPods) தொடரில் புதிய அம்சமாக "லைவ் ட்ரான்ஸ்லேஷன்" (Live Translation) அல்லது பிரெஞ்ச் மொழியில் "ட்ரடுக்ஷியோன் என் டைரெக்" (Traduction en direct) என்று பெயரிடப்பட்டுள்ள  உடனடியாக மொழிபெயர்ப்பு செய்யக்கூடிய வசதி இணைக்கப்பட்டுள்ளது.   இதனூடாக பாவனையாளர்கள் தங்கள் ஐபோன் (iPhone) அல்லது பிற ஆப்பிள் சாதனங்களுடன் (Apple Devices) உரையாடும்போது, பிரெஞ்ச் மொழி (French Language) உரையாடலை ஆங்கிலம் (English) அல்லது பிற மொழிகளுக்கு உடனடியாக மாற்றி பயன்படுத்திக்கொள்ள முடியும்.  செப்டம்பர் 19, 2025  முதல் விற்பனைக்கு வரவுள்ள இந்த கருவியை பிரான்ஸ் வா...